வரலாற்று உறவுகள் உள்ளது

0
253

பாரதத்தின் 74வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக தேசமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி வந்திருந்தார். குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து நாட்டின் முப்படை வீரர்களும் கலந்து கொள்கின்றனர். குடியரசு தின விழாவில் பங்கேற்க எகிப்து அதிபர் சிசி 3 நாள் பயணமாக டெல்லி வந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் உள்ளிட்டோர் அவரை வரவேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். பிரதமர் நரேந்திர மோடியுடன் எகிப்து அதிபர் பேச்சுவார்த்தை நடத்தினார். பாரதம் மற்றும் எகிப்து நாடுகளுக்கு இடையே சைபர் பாதுகாப்பு, தகவல் தொழில் நுட்பம், கலாசாரம், இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் ஒலிபரப்பு உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, எகிப்து அதிபர் மற்றும் அவரது குழுவையும் வரவேற்றார். “பாரதம் மற்றும் எகிப்து ஆகிய இரு நாடுகளும் பழமையான நாகரீகங்களை கொண்டவை. இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவுகளுக்கான வரலாறு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, ஆழமான இருதரப்பு உறவுகளை கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக எகிப்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த சந்திப்பில், கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் போரால் ஏற்பட்ட உணவு வினியோக சங்கிலி உள்ளீட்ட பாதிப்புகளை பற்றி ஆலோசித்தோம். இரு நாடுகளுக்கு இடையே கூட்டு ராணுவ பயிற்சி அதிகரித்து உள்ளது. எல்லை கடந்த பயங்கரவாதம் கட்டுப்படுவதற்கான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.அடுத்த 5 ஆண்டுகளில் இரு நாடுகளின் இருதரப்பு வர்த்தகம் ரூ. 97 ஆயிரத்து 967 கோடியை எட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது” என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here