மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கு | வாட்ஸ்அப்பில் சிவன் படம் வைத்த ஷரீக் – சதி குறித்து தீவிர விசாரணை

0
72

பெங்களூரு: மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கியுள்ள முகமது ஷரீக், தனது வாட்ஸ்அப் முகப்பாக ஆதியோகி (சிவன்) படத்தை வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

கர்நாடகாவின் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் (37) காயமடைந்தார். குக்கர் குண்டுடன் ஆட்டோவில் பயணித்த முகமது ஷரீக் (24) தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஷரீக், போலி ஆதார் அட்டை மூலம் சிம்கார்டு வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷிமோகாவில் குண்டுவெடித்து அவர் ஒத்திகையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து மங்களூரு போலீஸாரிடம் விசாரித்தபோது, ‘‘ஷரீக் திட்டமிட்டு தனது மத அடையாளத்தை மறைத்து செயல்பட்டுள்ளார். தனது வாட்ஸ்அப் முகப்பு படமாக (டிபி) ஆதியோகி சிவன் படத்தை வைத்துள்ளார். தனது பெயரை பிரேம்ராஜ், அருண்குமார் என கூறி விடுதிகளில் தங்கியுள்ளார். தமிழகத்தில் கோவை, ஊட்டி மற்றும் கேரளாவுக்கும் சென்று வந்துள்ளார்’’ என்றனர்.

மங்களூரு மாநகர காவல் ஆணையர் சசிகுமார் கூறும்போது, ‘‘ஷரீக்குடன் தொடர்பில் இருந்த 4 பேரை விசாரித்து வருகிறோம். அதில் 2 பேர் மைசூருவை சேர்ந்தவர்கள். ஒருவர் மங்களூரு, மற்றொருவர் ஊட்டியை சேர்ந்தவர்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here