மௌலானா சாஜித் ரஷிதியின் புதுக்கதை

0
75

முஸ்லிம்கள் அல்லாதவர்களை காபிர்கள் என அழைக்கும் அந்த சமூகத்தின் கடந்த கால ஆட்சியாளர்கள், கொள்ளையர்கள் மற்றும் படையெடுப்பாளர்களால் ஹிந்துமத கோயில்கள் மற்றும் சிலைகளை அழிப்பது அவர்களின் மதக் கடமையாக நிலைநிறுத்தப்பட்டது. காசி விஸ்வநாதர் கோயில், அயோத்தி ஸ்ரீராமஜென்ம பூமி, மதுரா கிருஷ்ண ஜென்ம பூமி உட்பட பல்லாயிரம் கோயில்களை அவர்கள் அழித்தும் இழிவுபடுத்தியும் கொள்ளையடித்தும் உள்ளனர். கோயில்கள் அழிக்கப்பட்ட இடங்களில் மசூதிகளை கட்டியுள்ளனர் என்பது வரலாறு. அவ்வகையில் கஜினி முகமதுவால் உலகப் புகழ்பெற்ற குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயில் மற்றும் ஒடிசாவின் பூரியில் உள்ள ஜெகநாதர் கோயில், முறையே 17 மற்றும் 18 முறை படையெடுக்கப்பட்டுள்ளன, ஏராளமான கோவில்கள் இழிவுபடுத்தப்பட்டன, கொள்ளையடிக்கப்பட்டன, அழிக்கப்பட்டன. சோம்நாதர் கோயிலில் 17 முறை படையெடுத்து கொள்ளையிட்ட கொடுங்கோலன் கஜினி முகமது, 1025ல், தனது பதினாறாவது படையெடுப்பின்போது இறைவன் சோமநாதர் சிலையை நான்கு துண்டுகளாக உடைத்தெறிந்து கோயிலுக்குள் நுழைந்தான்.

இதுகுறித்து பேசிய சர்ச்சைக்குரிய மௌலானா சாஜித் ரஷிதி, கஜினி முகமது, “முகலாயர் சகாப்தம் இருந்தது உண்மைதான். முகலாய ஆட்சியாளர்கள் 800 ஆண்டுகளாக ஆட்சி செய்தனர். இருப்பினும், அவர்களுக்கு மதத்துடன் எந்த தொடர்பும் இல்லை. நீங்கள் வரலாற்றைப் படித்தால், கஜினி முகமது போன்ற பல எடுத்துக்காட்டுகள் இருப்பதைக் காணலாம். கஜினி சோமநாதர் கோயிலை இடித்ததாக தவறாக கூறப்படுகிறது. உண்மையில், மத நம்பிக்கையின் பெயரில் அங்கு உண்மையில் என்ன நடக்கிறது என்பதை உள்ளூர்வாசிகள் கஜினிக்கு தெரிவித்தனர். தேவி தேவதாஸ் என்ற பெயரில் அங்கு என்ன செய்துகொண்டிருந்தார்கள், அங்கு இளம்பெண்கள் எப்படி காணாமல் போகிறார்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து கஜினி அங்கு ஆய்வு நடத்தினார். மக்கள் கூறிய கூற்றுகள் உண்மை என்பதை அறிந்து சோமநாதர் கோயிலுக்குச் சென்று படையெடுத்தார். சோம்நாதர் கோயிலை அழிக்காமல், அங்கு நடக்கும் தவறுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்” என வரலாற்றில் இல்லாத ஒரு புது கதையை தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த வீடியோ வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஷிதி ஹிந்துக்களுக்கு எதிராகவும் ஹிந்து கோயில்களுக்கு எதிராகவும் விஷத்தை கக்குவது இது முதல்முறை அல்ல. அயோத்தியில் வருங்காலத்தில் ராமர் கோயிலை இடித்துவிட்டு, அந்த இடத்தில் மசூதி கட்டப்படும் என்று கடந்த ஆண்டு டிசம்பரில் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து, சோம்நாத கோயில் அறக்கட்டளையின் பொது மேலாளர் விஜய்சிங் சாவ்தா, ஹிந்து மதத்திற்கெதிராக எப்போதும் பேசிவரும் மௌலானா சாஜித் ரஷிதிக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து பேசிய விஜய்சிங் சாவ்தா, “மௌலானா சஜித் ரஷிதியின் வீடியோவை நாங்கள் பார்த்தோம், அதில் அவர் சோம்நாதர் கோயிலைப் பற்றி அநாகரீகமான கருத்துக்களைக் கேட்டுள்ளார். அவரது கருத்து பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. சோம்நாதர் கோயில் அறக்கட்டளை சார்பில் நாங்கள் புகார் அளித்துள்ளோம்” என்று கூறினார்.

இதனிடையே, தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த மௌலானா சஜித் ரஷிதி, “யாரையும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல. என்று சோம்நாத் அறக்கட்டளையிடம் அரை மனதுடன் மன்னிப்பு கேட்டுள்ளார். தனது கூற்றுக்கள் ரொமிலா தாபரின் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை என்றும் தெரிவித்துள்ளார். கூடவே, முஸ்லிம் ஆட்சியாளர்களின் 800 ஆண்டு கால ஆட்சியின் போது, பாரதத்தில் உள்ள பல கோயில்களுக்காக நிலங்களை நன்கொடையாக அளித்தனர், அந்த கோயில்களை அழகுபடுத்த நிதியளித்தனர் என இல்லாத கதை ஒன்றையும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here