கோவை கலவரத்தின் பொது விஜயபாரத்தத்தில் வந்த கட்டுரை:
தி ரு. எல்.கே. அத்வானி அவர்களின் தேர்தல் பிரச்சாரக் கட்டம், ஆர்.எஸ். புரத்தில் 14.2.98 அன்று மாலை (3.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெறும் என்று சுவரொட்டி மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் அறிவிப்பு செய்திருந்தோம். அத்வானி அவர்கள் (வருகையில் காலதாமதம் ஏற்பட்டது. (வேட்பாளர் மற்றும் முக்கிய (பொறுப்பாளர்கள் பீளமேடு |விமானதளத்திற்கு அத்வானி அவர்களை |வரவேற்கச் சென்றிருந்தனர். அத்வானி வருகையில் காலதாமதம் ஏற்பட்டது. நான் |3.15 வரை மேடையில் ஏற்பாடுகள் செய்துகொண்டு அங்குதான் இருந்தேன். பிறகு 3.20க்கு திரு. அத்வானியை வரவேற்க விமானதளம் நோக்கிப் புறப்பட்டேன். விமான நிலையத்தில் இருந்த போலீஸ் அதிகாரிக்கு செல்லுலார் போனில் தகவல் வந்தது, மேடைக்கு அருகில் குண்டு வெடித்தது என்று.
3.50 முதல் 4.20க்குள் 13 இடங்களில் குண்டு வெடித்துள்ளது. அத்வானி அவர்கள் 4.15 மணிக்கு விமானத்தில் வந்து இறங்கினார். விமானத்தை விட்டு இறங்கியதும் டெபுடி கமிஷனர் ராதோட், அத்வானி
அவர்களிடம் குண்டுவெடிப்பு பற்றிக் கூறி, அவரை அப்படியே திரும்பிப் போகுமாறு (கேட்டுக்கொண்டார். அத்வானி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. மேலும் அத்வானி அவர்கள், “என்ன நடந்துள்ளது என்பதை
முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் இங்கிருந்து நான் செல்லமுடியாது. அரசு நிர்வாகத்தின் நலனும், என் கட்சித் தொண்டர்களின் நலனும் இதனால் பாதிக்கப்படும். அரசு நிர்வாகமும் என் கட்சியினரும் demoralised ஆகக்கூடாது என்பது என் கருத்து. ஆகவே நான் நகரத்திற்குச் செல்ல அனுமதியுங்கள்” என்றார். மேலும் அவர், “பொதுக்கூட்ட இடத்தை வேறு இடத்திற்கு மாற்றி அங்கு நான் பேச அனுமதியுங்கள்” என்று போலீஸ் அதிகாரிகளிடம் வாதாடினார். போலீஸ் அதிகாரிகள், நகரத்தில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளதால் பொதுக்கூட்ட அனுமதி இல்லை என்றதும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து ஆறுதல் சொல்ல அனுமதி கோரினார். அதற்கும் அனுமதி இல்லை என்றதும், அத்வானி
ஒரு போலீஸ் அதிகாரி என்னிடம் அவர்கள், மக்களைப் பார்த்து ஆறுதல் கூறாமல் செல்லமுடியாது என்றும், வேண்டுமானால் தன்னை கைது செய்து கொள்ளுங்கள் என்று கூறினார். அத்வானி அவர்களின் உறுதியைப் பார்த்தபிறகு அனுமதி அளித்தனர். அவர் மருத்துவமனை சென்று அங்குள்ள பாதி க் க ப் ப ட் ட வ ர் க ைள யு ம் , ம ர ண ம ன ட ந் த வ ர் க ளி ன் உறவினர்களையும் பார்த்து ஆறுதல் கூறினார். அதன்பிறகு அவர் திருச்சி பொதுக்கூட்டத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.
மேடையின் 200 மீட்டர் தூரத்தில் சண்முகம் ரோட்டில் முதல் வெடிகுண்டு வெடித்தது. பிறகு தெற்குப் பகுதியில் 100 மீட்டர் தூரத்தில் மற்றொரு குண்டு வெடித்தது. மேடைக்கு 100 மீட்டர் தூரத்தில் இன்னொரு பக்கம் அன்னாசிப் பழவண்டியில் குண்டு இருந்தது. அதை போலீஸார் செயலிழக்கச் செய்துவிட்டனர். ஒரு போலீஸ் அதிகாரி என்னிடம் ஒரு தகவல் சொன்னார். வித்தியாசமான நபர் ஒருவர் மேடைக்கு அருகில் நடமாடியதாகவும், சந்தேகத்தின் பேரில் அவனைப் பிடித்து விசாரிக்க முற்பட்டபோது, அவன் ஒடியதாகவும், சிறிது தூரம் ஓடியபின்பு அவனிடம் இருந்த குண்டு வெடித்து இறந்துபோனான் என்றும் அந்த அதிகாரி கூறினார். இந்தத் தகவலை அத்வானியிடம் நான் தெரிவித்தேன்.
அத்வானி அவர்கள், மத்திய புலனாய்வுத் துறையே ஒரு வாரத்திற்கு முன்பு, தன்னையும் திரு. வாஜ்பாய் அவர்களையும் கொலை செய்யும் நோக்குடன், தீவிரவாதிகளால் மனித வெடிகுண்டு தயார் செய்யப் பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் கவனத்துடன் இருக்கும்படியும் கூறினார்கள் என்றார்.
திருச்சி விமான நிலையத்தில் இறங்கியதும் U.N… நிருபரிடம், கோவை போலீஸ் அதிகாரி கொடுத்த தகவலான ‘மனிதவெடிகுண்டு’ பற்றிக் கூறினார்.
அடுத்தடுத்து 24 இடங்களில் குண்டுகள் வெடித்தன. பல இடங்களில் பைப் குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இது போன்ற குண்டுகள் நகரத்தில் 100 இடங்களிலாவது வைக்கப்பட்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக நகரத்தில் மக்கள் பீதியடைந்து தற்காப்புக்காக அங்கும் இங்கும்) அலைபாய்ந்தனர்.
மேடைக்கு 100 மீட்டர் தூரத்தில் (லோகமான்ய தெருவில் ஒரு பியட் காரில் வைக்கப்பட்ட குண்டு மிக நவீனமானதும் (சக்திவாய்ந்ததும் என்று கருதப்படுகிறது அது வெடித்திருந்தால் 300 மீட்டர் சுற்றளவிற்கு பெருத்த சேதத்தை உண்டாக்கியிருக்கும் என கூறப்படுகிறது
முதலமைச்சர் வந்து சென்ற பின்பு (திருமால் தெருவில் ஒரு வீட்டில் |சோதனை நடத்தியபோது 6 போ இறந்தனர். அவர்கள் வைத்திருந்த குண்டுகள் வெடித்து அங்கேயே (காலமாயினர். இதுசம்பந்தமாக அங்கு 8 | பேர் கைதுசெய்யப்பட்டனர்.
நான், கமிஷனர் |நாஞ்சில்குமரன் அவர்களிடம், அத்வானி (வருகையின்போது அவரது பாதுகாப்பு பற்றி மிகவும் கவலைப்படுவதாகவும், அது குறித்து காவல்துறை மிகுந்த |எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். அதற்கு |நாஞ்சில் குமரன், இதெல்லாம் |பொதுக்கூட்டத்தில் பேசவேண்டியவை. |என்னிடம் பேசுகிறீர்களே என்று (உதாசீனமாக பதில் கூறினார். தேர்தலில் | போலீஸாரின் எச்சரிக்கை உணர்வும், (பாதுகாப்பு குறித்த ஏற்பாடுகளும் |முழுமையாகத் தோல்வியடைந்து விட்டன.
தஞ்சை மாவட்டத்திலிருந்து நாசவேலை செய்பவர்கள் 10 குழுக்களாக வந்துள்ளதாகவும், அதில் ஒரே ஒரு குழுதான் காவல்துறையால் பிடிக்கப்பட்டு இருப்பதாகவும், மீதம் 9 குழுக்கள் பிடிபடாமல் தலைமறைவாக இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
ஸ்வயம்சேவகர்களுக்கும், தேசப்பற்றுள்ள குடிமக்களுக்கும்
திரு. எச்.வி. சேஷாத்ரி அவர்களின் வேண்டுகோள் | ஆர்.எஸ்.எஸ்.ஸின் அகில பாரதச் செயலாளர் எச்.வி. சேஷாத்ரி அவர்கள், (கோவை தொடர் குண்டுவெடிப்புச் சம்பந்தமாக விடுத்த அறிக்கை கோவையில், காலனின் பிடியில் இருந்து திரு. அத்வானிஜியைக் காப்பாற்றிய கருணையே வடிவான பரம்பொருளுக்கு, லட்சக்கணக்கான ஸ்யவம்சேவகர்களும், தேசபக்தியும், தேசியச் சிந்தனையும் உள்ள கோடிக்கணக்கான மக்களும் தமது | நன்றியைத் தெரிவித்திருக்கின்றனர். அத்வானிஜி மற்றும் அவர் போன்ற பல தலைவர்களும் தங்கள் உயிரையும் பணயம் வைத்து, கொலை மிரட்டல்களுக்கு அஞ்சாது, அச்சமின்றி, சாதாரண மக்களிடையே பழகி, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் | செய்துவருகின்றனர். இறைவன் தமது அருட்கரம் கொண்டு அவர்களைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை புரிகின்றனர். அக்னிப் பரீட்சைக்கு ஒப்பான அவர்களுடைய துயரங்கள் இறைவன் அருளால், நாட்டிற்கு ஒரு புதிய ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கட்டும். தமிழ்நாட்டில், கோவையில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் உயிர் இழந்தோரின் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்தனை புரிவோம். உற்றார் உறவினரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு நமது நெஞ்சார்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறேன்.