49,000 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

0
51

ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் முன்னெடுத்துள்ள நில அத்துமீறல், ஆக்கிரமிப்பு எதிர்ப்பு இயக்கத்தில் இதுவரை காஷ்மீர் முழுவதும் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து சுமார் 3.90 லட்சம் கனால் (சுமார் 49,000 ஏக்கர்) வசிப்பிட நிலங்களையும் கச்சராய் (மேய்ச்சல் நிலம்) நிலங்களையும் மீட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. காஷ்மீர் அப்சர்வர் அறிக்கையின்படி, ஜம்மு காஷ்மீர் வருவாய்த் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், “மீதமுள்ள 2.70 லட்சம் கனால் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க அரசுத்துறை ஆட்களும் இயந்திரங்களும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார். தெற்கு காஷ்மீரில் இருந்து இதுவரை பெரும்பாலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்கள் அதிகாரிகள், அரசியல்வாதிகள் என யாராக இருந்தாலும் கவலைப்படாமல் அவர்களிடம் இருந்து நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. மீட்கப்பட்ட நிலங்கள், வளர்ச்சித் திட்டங்கள், விளையாட்டு மைதானங்கள், கிராமங்களை மையமாகக் கொண்ட வசதிகள், தொழில்கள் போன்ற பல்வேறு பொது நோக்கங்களுக்காக உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகளால் சம்பந்தப்பட்ட கிராமவாசிகள், அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டு அடையாளப் பலகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன” என தெரிவித்தார். “அரசின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் மற்றும் பிராந்திய அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பணக்காரர்கள் மட்டுமின்றி சாமானியர்கள், சிறுகடை வியாபாரிகள் என அனைவரும் குறிவைக்கப்படுவதாக ஆக்கிரமிப்பாளர்கள் கூறுகின்றனர். மேலும், காலி செய்வது குறித்து மக்களுக்கு முன்னறிவிப்பு வழங்கப்படுவதில்லை என்றும், அந்தகள் வாய்ப்பு வேண்டுமென்றே தவிர்க்கப்படுவதாகவும் அரசியல் கட்சிகள் கூறுகின்றன. இருப்பினும், இதுவரை செயல்படும் ஒரு குடியிருப்பு வீடு கூட இடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர். மேலும், எவ்வாறாயினும், எந்தவொரு கட்டமைப்பையும் இடிப்பதும் நிலத்தையும் மீட்பதும் அது சட்டவிரோதமானது என்பதை அதிகாரிகள் உறுதிசெய்தால் மட்டுமே செய்யப்படுகிறது. முந்தைய ஆட்சியாளர்களால் ரோஷ்னி நிலச் சட்டம் என்ற பெயரில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சட்டவிரோதமாக நிலம் வழங்கப்பட்டது. 2020ல் ரோஷ்னி நிலச் சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. ஜனவரி 2023ல், ரோஷ்னி நிலம் மற்றும் கச்சராய் நிலம் உட்பட ஜம்மு காஷ்மீர் அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுமாறு ஜம்மு காஷ்மீர் அரசு உத்தரவிட்டது. இந்த சட்டங்கள் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டிய அவசியமில்லை. எனினும், அந்த நபர் தனது கூற்றை நிரூபிக்க உறுதியான காரணங்கள் இருப்பதாக அவர்கள் நினைத்தால் மட்டுமே அரசாங்கம் அந்த குடியிருப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்குகிறது. யாருடைய சொந்த கட்டடத்தையும் இடித்து, அந்த நிலத்தை அரசு மீட்பதாக இருந்தால், பாதிக்கப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தை அணுகியிருப்பார்கள். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அவர்கள் சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்திருந்தால் நீதிமன்றம் எந்த நிவாரணமும் வழங்காது என்று தெரிந்ததும், அவர்கள் சமூக ஊடகங்களில் சத்தம் போடுகிறார்கள்” என ஒரு பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here