அ.கி.இராமானுசன்

0
188

1. இராமானுசம் அவர்கள் மைசூரில் 16.03.1929-ல் பிறந்தவர்.
2. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு, கன்னடத்தைக் கல்வி மொழியாகக் கொண்டு, ஆங்கில மொழியையும் இலக்கியங்களையும் நன்கு கற்றவர் அத்திப்பட்டு கிருட்டிணசாமி இராமானுசன்.
3. அமெரிக்காவிற்குக் கல்வியின் பொருட்டும்,பணியின் பொருட்டும் சென்று தமிழை அமெரிக்கா உள்ளிட்ட பிற மொழியினருக்கு அறிமுகம் செய்து உலக அளவில் தமிழ் இலக்கியம் பரவக் காரணமாக இருந்தவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
4. ஆங்கில விரிவுரையாளராகக் கொல்லம் கல்லூரியிலும், மதுரை தியாகராசர் கல்லூரியிலும் பணிபுரிந்தவர். (முனைவர் ஔவை . நடராசன் இவரிடம் பயின்றவர் என அறியமுடிகிறது).
5. River என்னும் தலைப்பில் இராமானுசன் அவர்கள் எழுதிய பாடல் வைகை ஆற்றைப் பற்றிய அழகியப் படப்பிடிப்பு.
6. இராமானுசன் அவர்களின் இலக்கியப் பணியையும், இந்திய நாட்டிற்கு ஆற்றிவரும் பெருமை மிக்க செயல்களையும் அறிந்த இந்திய அரசு இவருக்கு 1983ல் பத்மஸ்ரீ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
7. 1988ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளுக்கான இராதாகிருட்டிணன் நினைவு விருது இவருக்கு வழங்கப்பட்டது.
8. தமிழ்மரபை உள்வாங்கிக்கொண்டு ஆங்கில மரபைச் சரியாக உணர்த்தி, கற்பவர்கள் உள்ளத்தில் காட்சிகளைப் பதிய வைப்பதில் இராமானுசன் மிகச்சிறந்த ஆற்றல் பெற்றவர். குறுந்தொகையில் இடம்பெறும் பல்வேறு உணர்வுகள் அப்படியே ஆங்கிலம் வழியாக காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here