சதீஷ் குமார் கௌதம் உத்திரப்பிரதேசம் அலிகர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர். பா.ஜ.க.வைச் சேர்ந்தவர். 2014 முதல் அலிகர் தொகுதியின் உறுப்பினராக இருந்து வருகிறார்.
2014 முதல் தனது தொகுதியைச் சார்ந்த வாக்காளர்கள் 12000 க்கும் அதிகமானோ ரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வந்து அதன் செயல்பாடுகளைக் காண்பதற்கு எற்பாடு செய்து தந்துள்ளார்.
நாடாளுமன்றம் செயல்படும் நாட்களில் தனது தொகுதியிலிருந்து தினசரி 5 பேருந்துகளில் வாக்காளர்களை அழைத்து வருகிறார். அவர்கள் தில்லியில் தங்கிட, உணவு எற்பாடு போக்கு வரத்து செலவு என அனைத்தையும் இவரே செய்கிறார்.
வெற்றி பெற்ற பிறகு எம்.பி. கள் தொகுதிப் பக்கம் திரும்பிக் கூட பார்ப்பது கிடையாது என்பதை மாற்றி வாக்காளர்களுடன் உள்ள தொடர்பு துண்டித்து விடாமல் பார்த்துக் கொள்கிறார்