நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்

0
220

நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன

1. நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் ஏப்ரல் 2, 1924ஆம் ஆண்டு தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் எனும் சிற்றூரில் பிறந்தவர். தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர். இந்தியா முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.

2. இவரின் தந்தை பெயர் காத்தாசாமி பிள்ளை, தாய் குஞ்சம்மாள். நாமகிரிப்பேட்டை அரசினர் பள்ளியில் பயின்றவர்.

3. நாதசுவரம் வாசிப்பதில் தனக்கென ஒரு பாணியை பின்பற்றி ரசிகர்களை கவர்ந்தார். இசைக் குடும்பத்தில் பிறந்த இவர் சிறுவயதில் பாட்டனார் சின்னப்ப முதலியாரிடம் நாதசுவரமும், வாய்ப்பாட்டும் கற்றார். பின் அருப்புக்கோட்டை கணேசனிடம் முறைப்படி நாதசுவரம் பயின்று. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நாதசுவரக் கச்சேரிகளை ஏராளமாக நிகழ்த்தியுள்ளார்.

4. கலைமாமணி விருது 1972, பத்மஸ்ரீ விருது 1981, சங்கீத நாடக அகாதமி விருது 1981, இசைப்பேரறிஞர் விருதுகளை பெற்றுள்ளார்.

5. திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலின் ‘ஆஸ்தான சங்கீத வித்வானாக’ 1977 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here