பேரிடர் காலங்களில் நடக்கும் மீட்பு பணி மற்றும் முயற்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என ஐந்தாவது உலக பேரிடர் மீட்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பேரிடர்களை தாங்கும் உள்கட்டமைப்பு குறித்த வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கூறியது, பேரிடர்களை தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணியில் இன்னும் சில ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இணைய உள்ளன. இந்த மாநாடு, வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதாரங்கள், சிறிய மற்றும் பெரிய நாடுகள், வட மற்றும் தென் துருவங்கள் ஒரே தளத்தில் வருவதற்கான வாய்ப்பை இந்த மாநாடு ஏற்படுத்தி கொடுக்கிறது. பேரிடர் காலங்களில், யாரையும் விட்டுவிடாமல் அனைவரையும் ஒன்று சேர்க்கும் வகையில் உள்கட்டமைப்பு இருக்க வேண்டும்.என்று ஐந்தாவது உலக பேரிடர் மீட்பு மாநாட்டில் இந்திய பிரதமர் பேசினார் .