ராகுல் காந்தி வழக்கில் நீதிபதியை மிரட்டிய காங்கிரஸ் தலைவர் 

0
206

‘மோடி’ என்ற இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒட்டுமொத்தமாக இழிவுபடுத்திய வழக்கில், குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.15,000 அபராதமும் விதித்தது. இதனால், சட்ட விதிகளின்படி, அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. ஆனால், இதனை பா.ஜ.க செய்ததாக ஒரு போலி பிம்பத்தை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கட்டமைத்து வருகின்றன. இதற்காக நாடெங்கும் வன்முறை போராட்டங்களை காங்கிரஸ் கட்சி தனது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து நடத்தி வருகிறது. திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி, எஸ்.டி பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராகுல் காந்திக்கு தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்ற நீதிபதி ஹெச். வர்மாவின் நாக்கை அறுப்பேன்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.இதனையடுத்து வடக்கு காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here