அஜ்மீர் – தில்லி கண்டோன்மெண்ட் வழித் தடத்தில் வந்தே பாரத் அதி விரைவு ரயில் சேவையை பிரதமர் மோதி ஏப்ரல் 12 ஆம் தேதியன்று காணொளிக் காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கடந்த ஒரு மாதத்தில் அந்த ரயில் 13 தடவை கற்களால் தாக்கப்பட்டுள்ளது. இதுவரை எவரும் பிடிபடவில்லை.
வழக்கில் இருந்து தப்பிக்க சிறுவர்களைக் கொண்டு தாக்குதல் நடைபெறுவதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
மதவெறி வெறுப்புணர்வு, மனிதர்களிடம் மட்டுமின்றி ரயில் வண்டி மீதும் காட்டப் படுகிறது.
வந்தே பாரத் அதிவிரைவு ரயில் தொடங்கப் பட்ட வழித்தடங்கள் சிலவற்றில் முதல் நாளே கற்களால் தாக்கப்பட்டன.
தொடர்ந்து குறிப்பிட்ட சில இடங்களில் கற்களால் தாக்கப்பட்டதில் கண்ணாடிகள் சேதமடைந்தன. பயணிகள் சிலருக்கு காயமேற்பட்டது.
குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கினால் மட்டுமே மற்றவர்கள் இம்மாதிரி குற்றங்கள் செய்யத் தயங்குவர்.