காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட உத்தரவு

0
246

முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான வரும், 15ம் தேதியை, அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என, தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 15ம் தேதி அனைத்து விதமான பள்ளிகளிலும், கல்வி வளர்ச்சி தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். காமராஜரின் பணிகள் குறித்து பேச்சு, ஓவியம், கட்டுரை, கவிதைப் போட்டிகளை நடத்தி பரிசு வழங்க வேண்டும். இதற்கான செலவினங்களை பள்ளி வளர்ச்சி அல்லது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நிதியில் இருந்து செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here