காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை, கர்நாடக அரசு திறந்து விடாததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்கள் கருகி, விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். விவசாயிகளிடம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. காவிரியில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி, காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில், வரும், 11ம் தேதி டெல்டா மாவட்டங்களில், ‘பந்த்’ அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இன்று தமிழக சட்டசபை கூடுகிறது. சட்டசபையில், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட, கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வலியுறுத்தி, தமிழக அரசு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. தீர்மானத்தின் மீது, சட்டசபை கட்சி தலைவர்கள் பேச அனுமதிக்கப்படுவர். அப்போது, காரசார விவாதம் நடக்க வாய்ப்புள்ளது.