சரத்சந்திர சங்கர் ஸ்ரீகாந்த்19 அக்டோபர் 1917 ல் பிறந்தார்.
இந்திய கணிதவியலாளர். சேர்வியல் கணிதவியலில் பல அரிய சாதனைகள் நிகழ்த்தியதால் நன்கு பிரபலமானார்.
கலவையியல் மற்றும் புள்ளிவிவர வடிவமைப்புகள் இவரின் சிறப்புகள் ஆகும். ஸ்ரீகாந்த் வரைபடம் புள்ளிவிவர வடிவமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகவும், மும்பை பல்கலைக்கழகத்தில் கணிதவியல் துறையின் தலைவராகவும், மும்பை Center of Advanced Study in Mathematics இன் தலைவராக ஓய்வு பெறும் வரையிலும் பணியாற்றினார்.இந்திய தேசிய அறிவியல் கழகம், இந்திய அறிவியல் கழகம், மற்றும் அமெரிக்காவின் கணிதவியல் கழகம் ஆகியவற்றின் உறுப்பினராக இருந்துள்ளார்.
#சான்றோர்தினம்