பீர்பால் சஹானி

0
2157

பீர்பால் சகானி 1891 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ல் மேற்கு பஞ்சாபின் சாகாப்பூர் மாவட்டத்திலுள்ள பேரா நகரத்தில் பிறந்தார். இந்திய தொல்தாவரவியலாளர். இலண்டன் ராயல் அறிவியல் கழகத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். இந்திய துணைக் கண்டத்தின் புதைபடிவங்களைப் பற்றி ஆய்வு செய்தார். புவியியல் மற்றும் தொல்லியல் துறைகளிலும் ஆர்வம் காட்டினார். 1946 ஆம் ஆண்டு லக்னோவில் தொல்தாவர பீர்பால் சகானி நிறுவனத்தை நிறுவினார். இந்தியாவின் புதைபடிவ தாவரங்கள் பற்றிய ஆய்வு மற்றும் தாவரங்களின் பரிணாம வளர்ச்சியில் ஆய்வு ஆகியன இவரின் முக்கிய ஆய்வுகள். இந்தியாவின் தேசிய அறிவியல் அகாடமியின் தலைவராக இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here