பொது சிவில் சட்டம் 2024 மசோதாவை மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தாக்கல் செய்தார். விவாதத்துக்கு பின்னர் மசோதா நிறைவேறியது.சுதந்திரம் அடைந்து 75 வருடங்களுக்குப் பிறகு பொது சிவில் சட்டம் இயற்றியுள்ள முதல் மாநிலம் உத்ராகண்ட். கோவா மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. 1961இல் போர்த்துகீசியர்களிடமிருந்து கோவா விடுதலை பெற்ற போதே அங்கு பொது சிவில் சட்டம் இருந்தது.