ஹிந்துக்களின் காவியமான ராமாயணத்தை முழுக்க முழுக்க தங்கத்தால் வடிவமைக்கப்பட்டு சுமார் 522 தங்க தகடுகளில் எழுதி வரும் 8 ஆம் தேதி அயோத்திக்கு அனுப்ப தயாராக உள்ளது. இது சென்னையில் உள்ள உம்மிடி பங்காரு கடையில் வடிவமைக்கப்பட்டது. இவற்றின் மொத்த எடை 147 கிலோ என்று கூறப்படுகிறது.
இதில் பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், சுந்தர காண்டம், உத்தர காண்டம் ஆகிய அனைத்து பாகங்களில் உள்ள போதனைகள் மற்றும் கருத்துக்கள் இதில் இடம்பெறுள்ளன. இதில் உள்ள ஸ்லோகங்கள் சமஸ்கிருதத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.இவற்றை உருவாக்க எட்டு மாதங்கள் ஆகியதாக கூறப்படுகிறது. ராம நவமி அன்று அயோத்தி கருவறைக்குள் எடுத்து செல்லப்படும் என்று கூறப்படுகிறது. முதல் பக்கத்தில் ராமரின் பட்டாபிஷேக காட்சிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.