நாளந்தா பல்கலை., புதிய வளாகத்தை திறந்து வைத்தார் பாரத பிரதமர் மோடி.

0
68

பாட்னா:  பீஹார் மாநிலம் ராஜ்கிரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தில் ரூ.1700 கோடி மதிப்பில் புதிய வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகத்தை இன்று( ஜூன் 19) பிரதமர் மோடி திறந்து வைத்தார். விழாவில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பீஹார் மாநில முதல்வர் நிதீஷ் குமார், 17 நாடுகளின் தூதர்கள், பல்கலை., பேராசிரியர் அபய் குமார் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பல்கலை., பேராசியர்களுடன் பிரதமர் மோடி குரூப் போட்டோ எடுத்து கொண்டனர். பின்னர் அவர், பல்கலை., வளாகத்தில் மரக்கன்றை நட்டார். இது தொடர்பாக, எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாளந்தா பல்கலை., நமது புகழ்பெற்ற கடந்த காலத்துடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது. இளைஞர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்தப் பல்கலைக்கழகம் நிச்சயமாக நீண்ட தூரம் செல்லும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here