பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்றார்.
இரண்டு நாட்கள் நடைபெறும் பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் ரதத்தை வடம்பிடித்து இழுத்தனர்.
முன்னதாக கோயிலின் உற்சவர்களான ஜெகநாதர், பலபத்திரர், சுபத்திரை ஆகியோரது சிலைகள் ரதங்களில் நிர்மாணிக்கப்பட்டன.
அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர். ஜெகநாதர் ரத யாத்திரையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், முன்னாள் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இதையொட்டி, பூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.