சுதந்திரப்போரில் சங்கத்தின் பங்கு

0
1408
நாடு முழுவதும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஆர்எஸ்எஸ் பாதுகாப்பும் உதவிகளும் செய்து வந்துள்ளது .இடதுசாரிக் கட்சிகள் சுதந்திரப் போரின் ஆர்.எஸ்.எஸ்க்கு எந்தப் பங்கும் இல்லை என அபாண்டமாக கூறி வருகிறது .இது அவர்களுடைய இயல்பான தீய குணத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.சங்கம் ஆரம்பிப்பதற்கு முன்பே டாக்டர் ஹெட்கேவார் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருந்தபோது கிலாபத் இயக்கத்தில் ஈடுபட்டதற்காக 1919- 1924இல் ஒரு வருட சிறை தண்டனை பெற்றுள்ளார். சங்கம் ஆரம்பித்து ஐந்து வருடம் முடிந்த தருவாயில் 1930 ஜனவரி 26சுதந்திர தினமாக கொண்டாட வேண்டும் என காங்கிரஸ் கேட்டுக்கொண்டது. ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் நாடு முழுவதும் அதை அமல்படுத்தினார்கள். அப்பொழுது டாக்டர் ஜி எந்த அமைப்பும் தேசத்திற்காக ஆதரவாக வேலை செய்தால் நாம் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது கடமை என்று கூறினார். ஆகவே எல்லா ஷாகாவிலும் உண்மையான சுதந்திர தினம் கொண்டாடினார்கள் மூவர்ண கொடி ஏற்றாமல் காவி கொடி ஏற்றியதை இடதுசாரிகள் குற்றமாக கூறுகிறார்கள் .அவர்கள் மறந்து போன உண்மையை இங்கே நினைவுபடுத்த வேண்டியதுள்ளது.1931ம் ஆண்டு மௌலானா அபுல் கலாம் ஆசாத் பொறுப்பு வகித்தகாங்கிரஸ் கொடி கமிட்டி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சுதந்திரத்திற்குப் பிறகு பாரதத்திற்கு காவி கொடி தேசியக் கொடியாக இருக்க வேண்டும் என்று கூறியதை நினைவு கூறுனார். இந்த ஒரு கலர் ஒரே கலர்தான் இந்தியாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் அடையாளமாக நெடுங்காலம் இருந்து வந்துள்ளது என்று கூறியுள்ளது கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் .சங்கத்தின் சிந்தனை என்பது மக்கள் மனதில் ஒன்றிப் போயிருந்தது. மேற்கத்திய சிந்தனையை நீக்குவதும் நம்மிடையே உள்ளஅடிமையான மனப்பான்மையை நீக்குவதுதான் சங்கத்தின் செயல்பாடு பிரிட்டிஷார் மூலம் நீங்கள் சாதித்தது எதுவும் இல்லை என்ற உண்மையை நினைவுக்குக் கொண்டுவந்து ஜாதி என வேற்றுமைகளை கூட மறந்து தேசியத்திற்காக ஒன்று ஒருமித்து செயல்பட வேண்டும் என்று கூறினார் .இதற்கு தான் தங்க வேலை வேலை செய்தது சங்கம் இதற்கான ஆற்றிவரும் பணியை அதிகமான காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்து மகா சபை உறுப்பினர் அறிந்து சங்கத்தின் செயலை ஆதரித்து வந்தனர். இதனை சங்கம் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஆதரவு உதவி செய்து வந்துள்ளது. 1942வருடம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சங்கத்தின் தொண்டர்கள் நேரடியாக கலந்து கொண்டார்கள்அதிகாரபூர்வ அறிக்கையின்படி சங்கத்தின் இரண்டு உறுப்பினர்கள் தான் இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்று வெட்டி சாரால் கைது செய்யப்பட்டார்கள் அவர்கள் ஒருவர் தாதா நாயக் ,மற்றொருவர் சாங் டுக்டோஜி மஹாராஜ்.குருஜி கோல்வல்கர் எந்த சூழ்நிலையிலும் இந்து சமுதாயத்தின் தற்போதைய நிலைமைக்கு இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் காரணமல்ல என்று உணர்ந்து ஒருநாளும் அவர்களை குறை கூறியதில்லை .மாறாக இந்து சமுதாயத்தின் உன்னத நிலைகளை இந்துக்கள் உணர்ந்து அவர்கள் அதற்காக பாடுபட வேண்டும் என்றுதான் கூறி வந்துள்ளார். இந்து தர்மத்தின் செயலே வசுதைவ குடும்பகம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீ சந்திரசேகர் ஜி
balasekaran66@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here