உலகில் திறமை வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதிகமானோர் ஆதரவுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
உலகத் தலைவர்களின் திறமையை மதிப்பீடு செய்து வெளியிடும் அமெரிக்கன் டேட்டா இன்டெலிஜென்ஸ் நிறுவனமான மார்னிங் கன்சல்ட் உலகத் தலைவர்களில் திறமை வாய்ந்தவர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில், 66 சதவீத ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். கோவிட் தொற்று காலத்தில் இவரது செல்வாக்கு சற்று சரிந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது முதலிடத்தை பிடித்துள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக, 65 சதவீத ஆதரவுடன் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி 2வது இடத்திலும், 63 சதவீத ஆதரவுடன் மெக்சிகோ அதிபர் லோபஸ் ஆப்ரேடர் 3வது இடத்தையும் பிடித்தனர்.
This post is priceless. How can I find out more?