கடலுக்கடியில் ஒரு தீவு.

0
237

கொச்சி அருகே கடலுக்கடியில் ஒரு தீவு இருப்பது போல் கூகுள் மேப்பின் சேட்டிலைட் போட்டோவில் தென்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சி கடற்கரையிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்கு அடியில் ஒரு தீவு இருப்பது கூகுள் மேப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தத்தீவு வானில் இருந்து பார்ப்பதற்கு பீன்ஸ் போன்ற வடிவில் உள்ளது. சுமார் 8 கிலோமீட்டர் நீளமும், 3.5 கிலோமீட்டர் அகலமும் கொண்டுள்ள இந்த தீவு, கிட்டத்தட்ட மேற்கு கொச்சியின் 50 சதவிகித நிலப்பரப்புக்கு சமம் என சொல்லப்படுகிறது.
இது செல்லனம் கர்ஷிகா சுற்றுலா மேம்பாட்டு கழகம் என்ற சங்கத்தின் மூலம் கேரள மீன்வளம் மற்றும் கடல் ஆய்வுகள் பல்கலைகழகத்தின் பார்வைக்கு வந்துள்ளது.
இதனை அடுத்து பல்கலைக்கழக வல்லுனர்கள் குழு அமைத்து, இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here