திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த ஷிமுல் காஜி, 30, சைபுல் இஸ்லாம், 40, மன்னமோலல், 31, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஏழு பிரிவுகளில் இவர்கள் மீது வழக்கு பதிந்து, ‘ஆதார்’ அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள் வைத்திருந்தது எப்படி என்று விசாரித்து வருகிறது காவல் துறை.
இது பற்றி போலீசார் கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளாக ஷிமுல் காஜி ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் தங்கி வேலை செய்து வந்தார். மேற்கு வங்கத்தில் பெறப்பட்ட அடையாள அட்டையால், ஈரோட்டில் ‛ஆதார்’ கார்டு பெற்றார். மற்ற இருவரும், இரண்டு ஆண்டுகளாக பொங்குபாளையம், ஊத்துக்குளியில் தங்கியிருந்தது தெரிந்தது. இரண்டு மாதம் முன், ஷிமுல் காஜி திருப்பூருக்கு வந்தார்.இவரிடம், திருப்பூர், ஈரோடு, கோவை பகுதியில் சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் தொடர்பில் இருந்தனர். திருப்பூரில் வேலை செய்யும் வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள், தங்கள் சம்பளத்தை,வீட்டுக்கு ஷிமுல் காஜி மூலமாக அனுப்பி வந்தனர். இதற்கு ஒரு தொகையை கமிஷனாக பெற்று வந்தார். கைதான மூன்று பேரின், விபரங்களை மத்திய உளவு பிரிவினர் பெற்று விசாரித்து வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.