குரோனா இரண்டாம் அலை காலத்தில் தூத்துக்குடி நகரில் களப்பணியாற்றிய அரசு சாரா தன்னார்வ அமைப்பான சேவாலயா அறக்கட்டளைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் நற்சான்றிதழ் வழங்கினார்கள். சேவாலயா அறக்கட்டளை தலைவர் திரு. ராஜேந்திரன் மற்றும் செயலர் திரு.ராஜாகாந்தி அவர்கள் பெற்றுக் கொண்டனர். மேலும் அறக்கட்டளை வேண்டுகோளின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 17 முதியோர் இல்லங்களில் உள்ள பெரியவர்களுக்கு ஆதார் அட்டை இல்லாததால் குரோனா தடுப்பூசி செலுத்த இயலாத நிலையில் அவர்களுக்கு உடனடியாக ஆதார் அட்டை ஏற்பாடு செய்து தடுப்பூசி செலுத்தப் மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்தார்.