நாட்டின் மிகப்பெரிய மிதவை சூரிய சக்தி ஒளிமின் திட்டத்தை ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம், சிம்ஹாத்ரி அனல்மின் நிலையத்தின் நீா்த்தேக்கத்தில் தேசிய அனல்மின் கழகம் உருவாக்கியுள்ளது.
இந்த திட்டத்தை கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. அதனை தற்போது தேசிய அனல்மின் கழகத்தின் மண்டல நிர்வாக இயக்குநா் திரு சஞ்சய் மதன் இந்தத் திட்டத்தை தொடக்கி வைத்தார்.
நீா்த்தேக்கத்தில் சுமார் 75 ஏக்கா் பரப்பளவில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான சூரியசக்தி ஒளிமின்னழுத்த தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுமார் 7,000 வீடுகளுக்கு ஒளியூட்டுவது மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 46,000 டன் கரியமில வாயுவின் பயன்பாட்டையும் இந்தத் திட்டம் குறைக்கும்.
மேலும் இதன் மூலம் ஆண்டிற்கு 1,364 மில்லியன் லிட்டா் தண்ணீா் சேமிக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதனால் 6700 வீடுகளின் தண்ணீா் தேவை பூா்த்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.