கரும்புக்கு குறைந்தபட்ச விலை உயர்த்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

0
135

சர்க்கரை ஆலைகளுக்கு, தரப்படும் கரும்பின் குறைந்தபட்ச விலை, ஒரு குவின்டாலுக்கு 290 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


சர்க்கரை ஆலைகளுக்கு, கரும்புக்காக நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச விலையை உயர்த்த வேண்டும் என்பது, விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், கரும்பின் குறைந்தபட்ச விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, 2021 – 2022 நிதியாண்டிற்கு 5 ரூபாய் உயர்த்தி, 1 குவின்டால் கரும்பின் குறைந்த பட்ச விலை 290 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு குவின்டால் கரும்பை உற்பத்தி செய்வதற்கு 155 ரூபாய் செலவு ஆகிறது. இந்நிலையில், தற்போது குறைந்தபட்ச விலை 290 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது, விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here