நாம் வணங்கும் ஆலயம்! நாம் விரும்பும் வகையில் பூஜை!!

0
629

அன்னைத் தமிழில் அர்ச்சனை, மற்றும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது, என்கின்ற விஷயங்கள் இன்று தமிழகத்தில் விவாதப் பொருள் ஆக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் ஆன்மீகம் பற்றிய அனுபவம், ஆகம நெறி முறைகள் பற்றிய தெளிவும், யதார்த்தமும் புரியாதவர்கள் உருவாக்கி இருக்கக்கூடிய குழப்பம் இது.

உண்மையில் சனாதன இந்து தர்மத்தில் தமிழகம் முழுக்க இருக்கக்கூடிய பல்வேறு ஆலயங்களில் பலதரப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் பூஜை செய்யக் கூடிய அர்ச்சகர் பணியில் இருக்கிறார்கள் .இன்னும் சொல்லப்போனால் பிராமணர்களுக்கு குலதெய்வமாக விளங்கக்கூடிய பல ஆலயங்களில் மற்ற பல சமுதாயத்தினர் தான் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார்கள்.

சில ஆகம முறைப்படி அமைக்கபட்ட ஆலயங்களில், முறையாக ஆகம விதிகள் கற்றவர்கள், அனுபவம் வாய்ந்த நபர்கள் தான் அதற்கான பூஜையை செய்ய வேண்டும். இது ஏதோ ஒரு சடங்காக செய்யக்கூடிய பணி அல்ல. சம்பளத்தை மையமாகக் கொண்டு நியமனம் செய்யும் வேலை வாய்ப்பும் அல்ல. மேலும் பாரம்பரியமாக பூஜை செய்து கொண்டிருக்கக்கூடிய ஒரு இடத்தில் வேறு ஒருவர் அமர்த்தப்படுவது என்பது சிரமங்களைக் கொடுக்கும். ஆகவே இன்றும் கூட சில ஆலயங்களில் பார்த்தால் குறிப்பிட்ட வேதங்களில், குறிப்பிட்ட பகுதிகளை படித்தவர்கள், குறிப்பிட்ட சாஸ்திரம் நெறிமுறைகள், குறிப்பிட்ட ஆகமங்கள் அறிந்தவர்கள் மட்டுமே அங்கு பூஜை செய்ய முடியும் .

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக யார் வேண்டுமானாலும் கருவறைக்குள் சென்று பூஜை செய்திட முடியாது , அது பிராமணர்களே ஆனாலும் .இதை ஆன்மீக நம்பிக்கை உள்ளவர்கள் வசம் விட்டு விட வேண்டுமே ஒழிய, அரசு நடைமுறைப்படுத்த நினைக்கக் கூடாது.

அவ்வாறு நியமிக்க வேண்டுமெனில் அரசே புதிதாக ஆலயங்களை உருவாக்கி அங்கு இது போன்ற நியமனங்களை நியமிக்கலாம். யாரும் ஆட்சேபிக்கவே மாட்டார்கள். இதில் இன்னும் ஒரு விசேஷம் இருக்கிறது.

தற்போது பல இடங்களில் புதிதாக உருவாகி வரும் குடியிருப்புகளில் புதிய கோவில்கள் கட்டப்படுகிறது. அதில் முக்கிய நிர்வாகிகளாக இருப்பவர்கள் யார் என்பதனை நாம் சொல்லவேண்டியதில்லை. ஆனால் அவர்கள் தங்கள் கோவிலுக்கு பூஜை செய்ய நல்ல ஐயர் வேண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

கிருஷ்ண முத்துசாமி ஜி
krishnamuthuswamy@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here