தேசிய விருது பெற்ற நுண் சிற்ப கலைஞரின் சந்தன மரத்தில் 13 மி.மீ., உயர விநாயகர் சிலை செய்து சாதனை.
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையைச் சேர்ந்தவர் நுண் சிற்ப கலைஞர் பரணி, 52. இவர், மர சிற்பங்கள் வடிவமைப்பதில் கைத்தேர்ந்தவர். குறிப்பாக, சந்தன மரம், அரிசியில் சிற்பங்களை வடிவமைப்பதில் பிரசித்தி பெற்றவர். இதற்காக பல்வேறு தேசிய, மாநில விருதுகளை பெற்றவர். நாடு முழுதும், 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சந்தன மரத்தில், கலை நயத்துடன் கூடிய விநாயகர் சிற்பத்தை வடிவமைத்து உள்ளார். இந்த சிலை, 13 மில்லி மீட்டர் உயரம் கொண்டது. இதில், 2 மில்லி மீட்டர் உயரத்தில், விநாயகரின் வாகனமான மூஞ்சூரும் இடம் பெற்றுள்ளது. இவர் பல்வேறு மத்திய, மாநில விருது பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.