விநாயகர் சதுர்த்தியன்று தமிழக வினை தீர்க்க மத்திய அரசு அதிரடி.

0
736

விநாயகர் சதுர்த்தியன்று தமிழக வினை தீர்க்க ஒரு அதிரடி நடவடிக்கையினை மத்திய அரசு எடுத்துள்ளது.


ஆம், மதிப்பிற்குரிய ரவீந்திர நாராயணன் ரவி தமிழக ஆளுநராக நியமிக்கபட்டுள்ளார் .இது மிக பெரிய திருப்பம். இதுவரை தமிழக ஆளுநர்களாக முன்னாள் அரசியல்வாதிகள், கட்சிக்காரர்கள் இல்லை மத்திய அரசில் யாருக்காவது வேண்டிய அல்லது மாநில அரசு விரும்பி கேட்டு கொண்டவர்களோ தான் ஆளுநராக நியமிக்கப்பட்டார்கள்.

Ex-IPS RN Ravi appointed new Tamil Nadu Governor, Banwarilal Purohit shifted to Punjab- The New Indian Express

முதல் முறையாக உளவு மற்றும் காவல்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட சுருக்கமாக சொன்னால் அஜித் தோவலுக்கு அடுத்த இடத்தில் உள்ளவர் நியமிக்கபட்டிருப்பது இதுதான் முதல்முறை.

ஆர்.என்.ரவி என அழைக்கபடும் இந்த புதிய ஆளுநர் பாட்னாவில் பிறந்தவர், 1976ல் காவல்துறைக்கு வந்து கேரளாவில் பணியாற்றி பின் மத்திய உளவுதுறைக்கு மாற்றபட்டவர்.

இந்தியாவின் மிக சிறந்த நடவடிக்கைகளில்லாம் அவருக்கு பங்கு உண்டு. காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அமைதி திரும்ப மிகபெரிய நடவடிக்கை எடுத்தவர்.

வெளித் தெரியாத சாகசங்கள் நிறைய உண்டு, மாறுவேடங்களில் உயிருக்கு அஞ்சாமல் நக்சலைட்டுகளுக்குள் ஊடுருவி கள நிலவரத்தை அறிந்து வந்து மிகபெரிய சாகசங்களை செய்தவர். இவருக்கு மேல் அதிகாரியாக இருந்தவர்தான் அஜித் தோவல்,

அது காங்கிரஸ் ஆட்சிகாலங்கள் ஒரு கட்டத்துக்கு மேல் நடவடிக்கை எடுக்க முடியாமல் அஜித் தோவலின் கரங்கள் கட்டபட்டன என்பதால் முடிந்தவரை பாடுபட்டார் ரவி. 2012ல் ஓய்வும் பெற்றார்

2014ல் மோடி வந்தார், மோடி வந்ததும் செய்த ஆகசிறந்த காரியம் மிக திறமையான பணியாளர்கள் ஓய்வில் இருந்தாலும் அவர்களை அழைத்து வந்து தேசபணிக்கு அமர்த்துவது என்பது நிச்சயம் மிகசிறந்த அணுகுமுறை.

அதுதான் வடகிழக்கு மற்றும் காஷ்மீர் பக்கம் நீண்ட அணுகுமுறை கொண்ட ரவியினை நாகலாந்து விவகாரங்களுக்க்கான அலுவலராக‌ அறிவித்தார் மோடி,

ரவியும் மிக சாதுர்யமமாக கடமையாற்றி நாகலாந்தில் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். 2016லே அங்கு தீவிரவாதிகளை ஆயுதத்தை கீழே போட செய்து சமாதானத்தை உருவாக்கினார்.

நிச்சயம் பஞ்சாபில் தீவிரவாதத்தை வேறறுக்க கில்லும் அஜித்தோவாலும் அரும்பாடு பட்டதை போன்றே நாகலாந்தில் அமைதியினை இரவி நிலைநாட்டினார்.Ajit Doval watch signing of truce between Myanmar insurgents

மோடி 2018ல் அவரை அஜித்தோவலுக்கு அடுத்தபடியாக துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக்கினார்.

பின் 2019ல் அதே நாகலாந்துக்கு ஆளுநரும் ஆக்கினார் மோடி, அதாவது தீவிர்வாதம் அங்கே மீண்டும் தலையெடுக்காமல் முழுக்க ஒழிக்க செய்யபட்ட ஏற்பாடு அது.

இப்பொழுது வடகிழக்கு மாநிலங்களில் அமைதி பூரணமாக திரும்பியதை அடுத்து தமிழகத்துக்கு அவர் அனுப்படுகின்றார்.

இது தமிழகத்துக்கு மிகவும் புதிது, ஒரு வகையில் திராவிட கும்பலுக்கு பலத்த அதிர்ச்சி வைத்தியம் தரும் நகர்வு.

பாரதத்தின் குழப்பமான மாநிலங்களில் தமிழகமும் ஒன்று, ஆனால் காஷ்மீர் பஞ்சாப் வடகிழக்கு போல் ஆயுதம் இல்லாத ஒன்றுதான் ஆறுதலான விஷயம்.

அவர்கள் ஆயுதமுனையில் தனிநாடு கோரி அட்டகாசம் செய்ததால் தேசம் அவர்களுக்கே முதலுரிமை கொடுத்தது.

திராவிட கும்பலும் பிரிவினைவாத கும்பல்தான் ஆனால் தனிநாடு கேட்கமாட்டார்கள், அவர்களின் ஒரே குறி ஆட்சியில் பங்குபெற்று கொள்ளை அடித்து கொண்டே இருப்பது, கொள்ளையில் சம்பாதித்ததை காக்க மறுபடி ஆட்சியில் இருக்க முயற்சிப்பது.

இதுதான் அவர்கள் கொள்கை இதற்கு அவர்கள் வைத்த பெயர் “மாநில சுயாட்சி”.

அதே நேரம் இலங்கை புலிகளுடன் சேர்ந்து இங்கு ஆயுத கலாச்சாரத்தை வளர்க்க முயன்றதை முளையிலே கிள்ளி எறிந்தது பாரதம். இவர்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள். காரணம் இவர்களுக்கு தனிநாடு கோரும் தைரியமோ ஆயுதம் ஏந்தும் திட்டமோ கிடையாது, ஒரே நோக்கம் ஊழல்.

இந்த ஊழலுக்குத்தான் அவர்கள் ஆட்சிக்கு வர துடிக்க அவர்களை வைத்து எப்படி பாரதத்தில் குழப்பம் விளைவிக்கலாம் என மிஷனரிகள் முயற்சிக்க, அவர்களோடு அரேபிய மதவாதிகளும் இணைகின்றனர். இது 1960 முதல் இங்கே நடக்கும் காட்சி

இதில் மிகபெரிய அழிவுகளும் நடந்தன, காமராஜர் தோற்று தேசியம் மறைந்ததில் இருந்து இந்திரா கொலைமுயற்சி, ராஜிவ் கொலை, கோவை குண்டுவெடிப்பு என ஏகபட்ட அழிவுகளும் கொடுமைகளும் நடந்தேறின‌. காங்கிரசும் இதை மறந்தது, திராவிடம் அதை தொடர்ந்தது.

மத்தியில் ஆட்சியில் இல்லாதபொழுதெல்லாம் தமிழகத்தில் தேசவிரோதமாக இந்துவிரோதமாக ஆடி தீர்க்கும் திமுக இப்பொழுது மறுபடியும் தன் அடுத்த தலைமுறை இன்னிங்க்ஸை தொடங்கியுள்ளது.

ஆட்சிக்கு வந்ததில் இருந்து “ஒன்றிய அரசு” என்பதில் துவங்கி “அர்ச்சகர்” திட்டம்வரை அது பலத்த சர்ச்சைகளை திட்டமிட்டு ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே இன்னும் இம்சைகள் அதிகரித்தன‌

மிஷனரி கைகூலிகள் ஆங்காங்கே மாநில அட்சியில் ஊடுருவி வருகின்றனர்., முக்காலமும் தேச எதிர்ப்பும் திராவிடம் எனும் பெயரில் கிறிஸ்துவ அட்டகாசம் இன்னும் பல அட்டகாசங்களை செய்வோர் எல்லாம் பதவிக்கு நியமிக்கபட்டுள்ளனர். மிக மிக மோசமான காலம் நோக்கி தமிழகம் வீழ்தொடங்கியுள்ளது.

இந்நிலையில்தான் வடகிழக்கில் மிக நீண்ட அனுபவம் கொண்ட, அதாவது கிறிஸ்தவ மிஷினரிகளால் குழப்பம் அடைந்து மிக பெரிய மிரட்டலாக உருவெடுத்த அந்த மாநிலங்களில் அவர்களின் சதியினை முறியடித்த ரவி போன்றவர்களை தமிழகத்துக்கு ஆளுநராக நியமிகின்றது மோடி அரசு.

இவர் அஜித் தோவலின் நெருங்கிய அதிகாரி என்பதால் ஏற்கனவே தமிழக கடத்தல், தீவிரவாதம், பிரிவினை, ரகசிய அரசியல் எல்லாம் அவருக்கு அத்துபடி.

மொத்தத்தில் குட்டிசாத்தான்கள் தலைவிரித்து ஆட தொடங்கிய நிலையில் அதிசக்திவாய்ந்த தேவதையினை அனுப்புகின்றார் மோடி,

இனி தமிழக காட்சிகள் ஒவ்வொன்றாய் மாறும், இந்த திராவிட அழிச்சாட்டியம், புலி விசுவாகம், பிரிவினைவாதம், ஒன்றியம் இன்னும் மகா மட்டமான தேசபிரிவினைவாதமெல்லாம் அடங்கும் என நம்பலாம். 75 வருடமாக காங்கிரஸ் செய்யாததை முதல் முறையாக மிக சரியாக செய்திருக்கும் மோடிக்கு வாழ்த்துக்கள்.

இதுவரை திமுக கண்டதெல்லாம் சொத்தை ஆளுநர்கள், பத்மநாபா கொலையினையில் கூட அப்போதைய ஆளுநர் அமைதியாக இருந்ததை காணபொறுக்காமல் டெல்லிதான் திமுக ஆட்சியினை டிஸ்மிஸ் செய்தது.

ஆளுநர் என்றால் பதவிபிரமாணம் செய்துவிப்பார்கள், விழாவுக்கு வருவார்கள் அவ்வளவுதான், தேநீர் தருவார்கள், விருந்து தருவார்கள் ,சும்மா பொம்மையாக இருப்பார்கள் என்பதுதான் இவர்கள் கண்ட ஆளுநர்கள், அப்படித்தான் இதுவரை கருதி கொண்டிருந்தார்கள்.

அப்படி ஆளுநர்களை கண்டுதான் “ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையா?” என கேட்டு கொண்டிருந்தார்கள்.

இனி ஆட்டின் முதுகில் சாட்டையினை ஓங்கி வைக்கும் பொழுதுதான் ஆளுநரின் அவசியமும் அதிகாரமும் புரியும். சுருக்கமாக சொன்னால் இப்படி சொல்லலாம். இதெல்லாம் இஸ்ரேலிய பாணி, அமெரிக்காவிலும் இது உண்டு

ஆம், நாட்டுக்காய் உளவுபணி ஆபத்தான காவல்பணியில் இருந்தவர்கள் ஓய்வுபெற்றபின் அவர்களின் நீண்ட அனுபவம் மற்றும் தேசாபிமானம் இவற்றை கருத்தில் கொண்டு மகா முக்கிய பணியில் அமர்த்துவார்கள். அவர்களால் நாடும் வலுவாகும், பாதுகாப்பு பலமாகும், எந்த பிரிவினை குழப்பமும் எடுபடாது.

ஆக காஷ்மீரிலும் வடகிழக்கிலும் அமைதியினை நிலைநாட்டிவிட்டு 70 ஆண்டுகால ஊழல், பிரிவினை என மகா குழப்பங்களை செய்யும் திராவிட கோஷ்டி பக்கமாக பார்வை திருப்பிவிட்டது மோடி அரசிற்கு.

திராவிடம் எனும் புற்றில் எந்தெந்த பாம்பு உண்டு, கம்யூனிஸ்ட், தமிழ் தேசியம், இன்னும் தமிழ் உணர்வு எனும் பெயரில் எத்தனை கொடுந்தேளும் பூரானும் உண்டு என்பதெல்லாம் எல்லோரையும் போல அவர்களுக்கும் தெரியும்.

அந்த புற்றை கலைத்து அங்கே பூந்தோட்டம் அமைக்க ஒரு உறுதியான தலைவனை அனுப்புகின்றது மத்திய அரசு. அந்த தேசாபிமானியினை இருகரம் கூப்பி வணங்கி வரவேற்கின்றது தமிழகம்.

இனி மெல்ல செழிக்கும் தமிழகம், வினை தீர்க்கும் விநாயகனின் நாளில் தமிழக கொடும் வினைகளெல்லாம் தீரட்டும்.

ஆக ரஜினி என்பவர் அரசியலுக்கு “சிங்கம் ஒன்று புறப்பட்டதே” என வருவார், பாஜக அதை செய்யும் என எதிர்பார்த்து அது பொய்த்த நிலையில் திரையுgovernorலக டம்மி சிங்கமெல்லாம் வேண்டாம் ஒரிஜினல் சிங்கத்தையே களமிறக்குவோம் என இறக்கிவிட்டது டெல்லி,

சிங்கம் கர்ஜனையோடு சென்னை நோக்கி வருகின்றது, அது வருகின்றது என்ற கர்ஜனையிலே கலங்கி நிற்கின்றது தமிழக நரிகூட்டம், அந்த கருடன் இறக்கை விரிக்க அலறி திகைக்கின்றது தீராவிடம் கொண்ட திராவிட கட்டுவீரியன்களின் கூட்டம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here