ஹிந்துக்களை புண்படுத்தியதாக ராகுல் மீது பாஜக குற்றசாட்டு.

0
385

ஹிந்துகளை ராகுலும், காங்கிரஸ் கட்சியும் புண்படுத்துவதாகவும், ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், பா.ஜ குற்றம் சாட்டியுள்ளது.


மகிளா காங்கிரசின் நிறுவன தினத்தையொட்டி நேற்று (செப்., 15) நடந்த சிறப்பு நிகழ்ச்சியில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுல் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‛காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தங்கள் ஆர்.எஸ்.எஸ்., – பா.ஜ.,வின் சித்தாந்தத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்த இரண்டில் ஒன்று மட்டுமே நாட்டை ஆள முடியும். ஆர்.எஸ்.எஸ்., – -பா.ஜ.,வினர் தான் போலி ஹிந்துக்கள். ஹிந்து மதத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் மத தரகர்கள். ஆனால் அவர்கள் ஹிந்துக்கள் அல்ல,’ எனப் பேசியிருந்தார். ராகுலின் இந்தப் பேச்சுக்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here