வித்யா பாரதி தமிழ்நாடு சார்பாக இன்று பண்பாட்டு பாட நூல் திட்ட பரவலாக்கம் குறித்த சிந்தனைக் கூட்டம் பெரம்பூர் விவேகானந்தா வித்யாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வடசென்னை பகுதியைச் சேர்ந்த 23 பள்ளிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் வித்யா பாரதி அகில பாரத கல்வி நிறுவனத்தின் செயலாளர் உயர்திரு அவனீஷ்ஜி அவர்கள் கலந்து கொண்டு வழிநடத்தினார்.
அவர் பேசுகையில், கோத்தாரி கல்வி கமிஷன் அறிக்கை சமர்ப்பித்த பின், கல்வியாளர் உயர்திரு கோத்தாரி அவர்கள், நம் நாட்டின் கல்வியாளர்களும் அறிவுஜீவிகளும் சிந்தனையில் இன்னமும் காலனி ஆதிக்கத்துடனும், நாட்டின் புவி ஈர்ப்பு மையம் நம் நாட்டிற்கு வெளியே உள்ளதாகவே கருதுகின்றனர் எனக் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டினார். இதிலிருந்து வெளியேறி நம் பண்பாடு சார்ந்த, நம் மக்களுக்கேற்ற வகையிலான கல்வியை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். பண்பாட்டுப் பாட நூலின் தேவையை அனைவரும் உணர்ந்து செயல்பட உறுதி பூண்டனர்