ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜகந்நாத் கோயிலின் நிர்வாகம், 500 கிலோ மதிப்பிலான கோயிலுக்கு தானமாக தரப்பட்ட வெள்ளி பொருட்களை 11 பெட்டிகளில் வைத்து பூரி மாவட்ட அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைப்பதற்காக கொண்டு சென்றது. இந்த வெள்ளி, கோயிலின் 12ம் நூற்றண்டை சேர்ந்த எட்டு வாயில் கதவுகளுக்கு வெள்ளித் தகடு பதிப்பிக்கும் பணிக்காக பயன்படுத்தப்படும். தெய்வங்கள் தற்போது கோயிலுக்குள் இருப்பதாலும் பொதுமக்கள் அதிகம் வருவார்கள் என்பதாலும் சாதாரண நாட்களில் வெள்ளி பூசும் வேலையை மேற்கொள்வது கடினம். எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள வருடாந்திர பூரி ரத யாத்திரையின்போது இந்த திருப்பணி நடத்தப்படும். அதுவரை வெள்ளியை கோயிலுக்குள் வைத்து பாதுகாப்பது புத்திசாலித்தனம் அல்ல என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.