சமூக ஒற்றுமையின் பலம்

0
316

கும்பாபிஷேகம் நடத்தி வெறும் 22 நாட்களே ஆன சிறுவாச்சூர் கோயிலை சில சமூக விரோதிகள் இடித்துத் தள்ளினர். இதனை கேள்விபட்ட பா.ஜ.கவை சேர்ந்த வழக்கறிஞர் அ.அஸ்வத்தாமன், அங்கு சென்று பார்வையிட்டார். சுமார் பத்து லட்ச ருபாய் செலவு செய்து கட்டப்பட்ட கோயிலை இப்படி இடித்துவிட்டார்களே என அந்த கோயில் தெய்வத்தை தங்கள் குல தெய்வமாகக் கொண்ட குடும்பத்தினர் கண்ணீர் மல்க அழுதனர். அஸ்வத்தாமனுடன் சென்றிருந்த அவரது நண்பர்கள் ஜான் ரவியும் ஹாரிஸ் என்பவரும் நாம் ஏன் கோயிலைக் கட்ட பணத்தை வசூலித்துத் தரக்கூடாது என கேட்டனர். ஜான் ரவி, கார்த்திக் கோபிநாத் போன்றோர் முதலில் பணம் போட்டு ஆரம்பித்தார்கள். சமூக ஊடகங்களில் இது குறித்த பதிவுகள் வெளியாகின. கார்த்திக் கோபிநாத், மாரிதாஸ் போன்றோரும் இது குறித்து சமூக ஊடகங்களில் செய்தி பதிவிட்டனர். இப்படி ஆரம்பித்தது இதற்கான நிதி சேகரிப்பு, துவக்கிய 8 மணி நேரத்திலேயே 10 லட்ச ரூபாய் வசூலாகியுள்ளது. இந்த நேர்மறையான செய்தி, தற்போது அதிகரித்துவரும் சமூக, ஒற்றுமை ஹிந்துக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, சமூக ஊடக விழிப்புணர்வு, சமூக ஊடகங்களாலும் மிக நல்ல விஷயங்களை சாதிக்க முடியும் என்பது போன்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைக்கிறது என்றால் அது மிகை அல்ல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here