சர்வதேச மனித உரிமைகள் தினம்

0
366

இரண்டாம் உலகபோரில் உலகம் முழுவதும் படுகொலைகள், சொத்து இழப்பு, பேரழிவுகள் ஏற்பட்டன. மறுபடியும் இப்படி நடக்காமல் தடுக்க உலக நாடுகள் இணைந்து 1948ல் சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை உருவாக்கின. அதன்படி ஐ.நா சபை டிசம்பர் 10ஐ மனித உரிமைகள் தினமாக அறிவித்தது.

மனித உரிமைகள் என்றால் என்ன என்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் சாசனத்தில், ‘சம உரிமையும், சுதந்திரமும் பிறக்கும் போதே உடன் பிறக்கின்றன. யார் ஒருவரையும் இனம், நிறம், மொழி, மதம், பிறப்பால் பாகுபாடு செய்யக்கூடாது. யாரும் யாருக்கும் அடிமை இல்லை. யாரும் சித்ரவதைக்கு உட்படலாகாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். நியாயமின்றி யாரையும் தடுத்து வைக்கக்கூடாது. நீதிமன்றத்தை அணுக குற்றம் நிரூப்பிக்கப்படும் வரை ஒருவரை நிரபராதி என கருதப்பட வேண்டும், அந்தரங்க விஷயங்களை பாதுகாக்க, சட்டத்திற்குட்பட்டு அனைத்து இடங்களுக்கும் செல்ல, சித்ரவதையிலிருந்து தப்பிக்க, புகலிடம் கேட்க, தேசிய அடையாளம் கேட்க, குடும்பம் நடத்த, சிந்தனை, சமய, கருத்து, மக்களாட்சி சேர்ந்திருக்க சமூக பாதுகாப்பு, விளையாட, ஓய்வெடுக்க, கல்வி, உணவு போன்றவற்றிற்குள்ள உரிமைகள் மனித உரிமைகளாகும்’ என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here