ஷிரோமணி அகாலிதள உறுப்பினர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், பஞ்சாப் விவசாயிகளின் வைக்கோல்களை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாவதாக பாராளுமன்றத்தில் கூறினார். இந்த விவாதத்தின் போது பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், இந்தக் வைக்கோலை எரிபொருள் மற்றும் உரமாகப்பயன்படுத்த திட்டமிட்டுளதாக தெரிவித்தார்.
என்டிபிசி சமீபத்தில் 3,000 டன் வைக்கோலை வாங்கியது, அதை உயிரி எரிபொருளுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பார்க்க அரசாங்கம் அதன் முடிவை மதிப்பாய்வு செய்யும் என்று யாதவ் குறிப்பிட்டார்.