வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது உள்ளிட்ட நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2021 திங்களன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தனர். அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சபையின் நடுவில் நின்று கோஷம் எழுப்பிய நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் காலை தாக்கல் செய்யப்பட்டது. மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராகப் பேசினர்.
மசோதாவை முன்வைத்த சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் வாதங்கள் ஆதாரமற்றவை என்றும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றும் கூறினார்.