கிறித்தவ மத பிரிவுகளுக்குள் இருக்கும் ஜாதி தீண்டாமையால் கேரளாவில் குரோனாவால் இறந்த பாதியாரை அடக்கம் செய்ய முடியாமல் 2 நாட்களாக பாதிரியாரின் குடும்பத்தினர் தவித்த சம்பவம் நடந்துள்ளது.
கேரளாவை சேர்ந்த ஆர்த்தோடோக்ஸ் பிரிவு பாதிரியார் வர்க்கீஸ் என்பவர் குரோனா பாதித்து உயிரிழந்தார். இவரது உடலை பெற்றுக்கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சி நிர்வாகி மற்றும் இவரது குடும்பத்தினர் இவர் பணியாற்றிய கிறித்தவ மத பிரிவு கல்லறை தோட்டத்தில் உடலை புதைக்க முயன்றனர்.
“பொதுமக்கள்” என்ற பெயரில் கிறித்தவ மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.. வர்கீஸ் வேறு மத பிரிவு பகுதியில் பிறந்தவர் என்பதால் அங்கு சென்று புதைக்க கூறி போராடினர். பாதிரியார் வர்க்கீஸ் பிறந்த இடமான வட்டியூர்காவு என்ற இடத்தில் மலை மீதுள்ள சர்ச் தோட்டத்தில் புதைக்க முயன்ற போது அந்த கல்லரை கிறித்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி தடுத்தனர். அதனால் மீண்டும் குமாரபுரம் என்ற இடத்தில் புதைக்க முயன்றபோது அந்த பகுதி கிறித்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்..
கிறித்தவ ஓட்டுவங்கிக்கு பயந்த கேரள கம்யூனிஸ்டு பினராயி விஜயன் அரசு, கிறித்தவ மதவாதிகள் ஆடிய ஆட்டத்திற்கு எல்லாம் அடிபணிந்து பாதிரியாரை புதைக்க இடம் கொடுக்காமல் நேரத்தை கடத்தியது.
ஒரு பிணத்திற்கு இப்படி அவமானம் ஏற்படுவதை கண்டு, இந்த பிரச்சனையை ஹிந்து அமைப்பினரும் நடுநிலமையாளர்களும் தொடர்ந்து கண்டித்து மீடியாவிலும், சமுக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பியதால் அதிர்ந்து போன கம்யூனிஸ்ட் அரசு, கிறிஸ்துவ மதவாதிகளை அழைத்து பேசி ஏற்பட்ட உடன்படிக்கையின்படி தனி இடத்தில் பாதிரியாரின் உடல் புதைக்கப்பட்டது!
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் ஒரு மாநிலத்தில் தீண்டாமையால் பிணத்தை நடுரோட்டில் போட்டு புதைக்க முடியாமல் உறவினர்கள் திண்டாடியதை தமிழகத்தை சேர்ந்த எந்த ஊடகமும் இந்த செய்தியை வெளியிடவில்லை! கம்யூனிஸ்ட் கட்சியின் மோசமான மதவாத ஆட்சி மற்றும் கிறித்தவர்களுக்குள் இருக்கும் உள்மத மோதல்கள் குறித்து செய்தி வெளியிட எந்த தமிழக ஊடகத்திற்கும் தைரியமில்லை.
ஆனால் ஏதாவது சிறிய இந்து கோவில் திருவிழாக்களில் யாராவது மதுபோதையில் தகராறு செய்தாலும், இரு ஜாதிகளுக்குள் மோதல் என பெரிய செய்தியாக வெளியிட்டு புழங்காகிதம் அடைவர் தமிழக மீடியாக்கள். கல்வி அறிவில் முன்னேறிய, சமூகநீதி பொதுவுடமை கம்யூனிஸ்டுகள் அதிகம் உள்ள மாநிலம் என்று புகழப்படும் கேரளாவில் இதுபோன்ற கிறித்தவ மத உள் பிரிவு மோதல்கள் அன்றாடம் தொடர்கதையாகவே இருக்கிறது!
தமிழகத்தில் ஜாதிக்கொடுமைகளால் மதம் மாறுகிறேன் என்ற பெயரில் மதம் மாறுபவர்கள் தங்கள் மனசாட்சியில் கைவைத்து சொல்லுங்கள். கிறித்தவ மதத்தில் ஜாதியோ அலலது மத உட்பிரிவு சண்டைகளோ இலலையா?
பிறகு எதற்காக இந்து மதத்தில் மட்டும் ஜாதிக்கொடுமை உள்ளது என பிரச்சாரம் செய்கிறீர்கள்? எதற்காக மதம் மாறினீர்கள் என்றால் பதிலில்லை.