சட்டவிரோதமான தொலைதொடர்பு மூலம் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு ஏஜென்டாக செயலப்பட்டவர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றது என்.ஐ.ஏ.
கடந்த 2019ல் போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி சிம் கார்டுகளை வாங்கி மோசடி, பயங்கரவாத சதி செயல்களில் ஈடுபட்ட சையத் அலி உட்பட பல முஸ்லிம் பயங்கரவாதிகளை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் இந்த சிம் கார்டுகள் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளான லியாகத் அலி மற்றும் கஜா மொய்தீனிடம் வழங்கபட்டதும், அவர்கள் அதனை பயன்படுத்தி பயங்கரவாத செயல்கள், நிதி திரட்டுதலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
மேலும் அவர்கள் சட்டவிரோத நடவடிக்கை, வெடிகுண்டு பொருட்கள் வைத்திருந்தல் போன்ற சட்டத்தின் கீழ் கேரளா மாநிலத்தை சேர்ந்த சையத் அலி என்பவர் மீது தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ, பூந்தமல்லி நீதிமன்றதில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதனை அடுத்து அவர்கள் மீது என்.ஐ.ஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விசாரித்து வருகிறது.