ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
7-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி பேசிய பிரதமர் மோடி, நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி உரையாற்றினார்.
மேலும் அவர் பேசியதாவது, கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் உலகமே போராடி வருகிறது. தற்போது யோகா நம்மை சோர்விலிருந்து ஆற்றலுடையவர்களாக மாற்றுகிறது. யோகா நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. நோய்க்கு மூல காரணம் என்னவென்பதை அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறினார்.