பாகிஸ்தானில் கட்டாய மத மாற்றம் நடக்கிறது. அதற்கு அரசு துணை போகிறது. இந்தியா குற்றசாட்டு.

2
329

பாகிஸ்தானில், தினமும் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக, ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில், இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐ.நா.,வுக்கான இந்திய துாதரக குழுவின்முதன்மை செயலர் பவன்பதே பேசியதாவது: பாக்.,கில் தினந்தோறும் கட்டாய மதமாற்றம் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. அங்கு ஹிந்து, கிறிஸ்துவர், சீக்கியர் உள்ளிட்ட சிறுபான்மையின சிறுமியரை கடத்தி, பாலியல் கொடுமை செய்து, கட்டாயமாக மதம் மாற்றி திருமணம் செய்வது, அரசின் ஆதரவுடன் நடக்கிறது.

கடந்த ஓராண்டில், 1,000த்திற்கும் மேற்பட்ட சிறுபான்மையின சிறுமியர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, திருமண பந்தத்தில் தள்ளப்படுகின்றனர். சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் சூறையாடப்படுகின்றன. இந்த கொடுமைகளுக்கு பாக்., அரசு துணை போகிறது. மேலும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட பாக்., அனுமதிக்கிறது. என குற்றம் சாட்டினார்.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here