RSS சிறப்பு பௌத்திக் – மா.ஸர்கார்யவாஹ் தமிழாக்கம்

2
450

கடந்த ஒருவருடமாக பாரதம் உட்பட உலகம் முழுவதும் ஒரு பெரிய பிரச்சனையில் சிக்கி தவித்துக் கொண்டு இருக்கின்றது.  கொரோனா நமது வாழ்க்கையையே மாற்றியுள்ளது.  ஒரு கண்ணோட்டத்தில் நமது வாழ்க்கை முழு அடைப்பிற்கு முன்பாக எப்படி இருந்தது என்பதே நமக்கு மறந்து விடக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.  நாம் முக கவசம் அணிகிறோம்; மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே கூடுகிறோம்; முழு அடைப்பு அமுலில் உள்ளது; ஆகவே இதற்கு முன்பாக நமது வாழ்க்கை எப்படி இருந்தது என்பதனை நாம் நினைவூட்டிக் கொள்ள வேண்டியுள்ளது.  

எனக்கு வாட்ஸ் அப்பில் வந்த ஒரு வீடியோ – அதில் ஒரு சிறுவன் தனது தந்தையாருடன் காரில் போய்க் கொண்டிருக்கிறான்.  அப்பொழுது சில கட்டடங்களைக் காண நேர்கிறது.  அதனைக் கண்டவுடன் அந்த கட்டடங்களைத் தான் எங்கேயோ பார்த்திருப்பதாகவும் தனக்கும் அக்கட்டிடங்களுக்கும் முன் ஜென்மத்திய சம்பந்தம் இருப்பதாகவும் கூறுகிறான்.  அவனை ஓங்கி அறைந்த தகப்பனார் அது அவனது பள்ளிக்கூடம் என்பதனை அவனுக்கு நினைவூட்டுகிறார்.  நமக்கும் பலமுறை நமது ஶாகா நடக்கும் இடங்களைப் பார்க்கிறபோது இதே எண்ணங்கள் தோன்றுவது இயற்கையே.  

இந்த 15 மாதங்களில் நாம் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறோம்; பல பிரச்சனைகளை எதிர் கொண்டு இருக்கிறோம்.  உலகம் முழுமைக்குமே இது ஒரு கடினமான காலம் தான்.  இந்த பிரச்சனைகள் இன்னும் முடியவில்லை.  எண்ணற்ற வேதனைகளை நாம் அனுபவித்திருக்கிறோம்.  நமது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.  பலர் அகால மரணமடைந்துள்ளார்கள்.  குடும்பத்தில் சேர்ந்து இருப்பது குறைந்துள்ளது.  பண்பு பதிவுகளும் இல்லை.  வேலைவாய்ப்பு, அலுவலகம், தொழில், பள்ளிகள், நீதிமன்றங்கள், தேர்வுகள் போன்ற வாழ்க்கையின் மற்ற பல விஷயங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.  பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  நாம் பல வேலைகளை இணைய வழியாகவே (online) செய்பவர்களாக மாறி இருக்கிறோம்.

 

நம்முடைய தினசரி வேலையாகிய ஶாகா பாதிக்கப்பட்டுள்ளது.  வேறு வழியில் இந்தப் பணிகளை நாம் செய்து வருகிறோம்.  இது நமக்கு இறைவனால் வைக்கப்பட்டுள்ள தேர்வாகும்.  மனிதனின் கருணையுள்ளமும் கடமை உணர்வும் பரந்த மனப்பான்மையும் வெளிப்படுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.  கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்ய சமுதாயம் முன்வந்துள்ளது.  உணவளித்தல், மருந்து கொடுத்தல், தனிமைப்படுத்துதல், போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்துதல் ஆகிய பல தொண்டு பணிகளை தனிநபர்கள், அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை செய்துள்ளன.  பரஸ்பர உதவி செய்வது நமது இயல்பு.  மிகச் சிறந்த விதத்தில் இந்த காலகட்டத்தில் இந்த தன்மை வெளிப்பட்டுள்ளது.  இது நமக்கு மிகுந்த உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.  

வருங்காலத் தலைமுறையினர் இதனைக் குறித்து அறிந்துகொள்வதற்காக இது ஆவணப்படுத்தப்படவேண்டும்.  இந்தப் பணியையும் பலர் செய்து வருகின்றனர்.  இது தற்புகழ்ச்சிக்காக அல்ல.  இந்த கஷ்டமான காலகட்டத்தை நாம் எப்படி எதிர் கொண்டோம் என்பது நமது வருங்கால தலைமுறையினருக்குக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.  அவர்களுக்கும் தன்னம்பிக்கை, உத்வேகம் அளிப்பதற்காகவே இந்த ஆவணப்படுத்துதல் (documentation). 

சமூகத்தின் நன்றிக்குரியவர்களாகப் பலர் திகழ்கின்றனர்.  மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் இப்படிப்பட்டவர்கள்.  ஸ்வயம்சேவகர்களும் நமது பல அமைப்புகளும் இதில் சிறந்த பங்காற்றியுள்ளன.  மனிதன் என்ன செய்ய முடியும் என்ற நம்பிக்கையினை உறுதிப்படுத்துவதற்கு இது தேவையாக இருக்கிறது.  நாம் சுயசார்பு அடையவேண்டும்.  நம்நாடு எப்பொழுதுமே பின்தங்கி விடவில்லை.  உலகப் போர் மூண்டபோது அதில் ஈடுபட்ட பல நாடுகளில் அவர்களின் குடும்பங்கள், கல்வி, பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்தது.  ஆயினும் அவை புணர்நிர்மானம் செய்யப்பட்டு உலகத்தின் முன்னிலையில் நல்ல உதாரணமாக இருக்கிறது.  உலகப்போர் மனிதனால் உருவாக்கப்பட்டது.  இயற்கை பேரழிவுகளும் ஏற்படுகின்றன.  எப்படியாகிலும் கஷ்டம் கஷ்டமே.  இவற்றிலிருந்து நாம் விடுபட்டு வரவேண்டியிருக்கிறது.  இந்த அனுபவத்தின் அடிப்படையில் வருங்காலத்தில் உத்வேகம் அளிக்கக் கூடியதாக நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.  

கடந்த ஆண்டின் முழு அடைப்பு காலத்தில் நமது பரம பூஜனீய ஸர்ஸங்கச்சாலக்ஜி தனது உரையில்‘ஏகாந்த் மே ஸாதனா; லோகாந்த் மே பரோபகார்’  (தனிப்பட்ட முறையில் தவம்; ஸமூக அளவில் பரோபகாரம்) என்று குறிப்பிட்டிருந்தார்.  இரு முறைகளிலும் நமக்கு நல்ல அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.  பலர் தங்களது சுயவளர்ச்சிக்காக தினசரி உடற்பயிற்சி செய்வது, படிப்பது, எழுதுவது ஆகிய பல நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.  சேவை செய்வது நமது சமுதாயக் கடமை என்ற அளவில் பலர் தொண்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த நல்ல அனுபவம் நமக்கு கிடைத்துள்ளது.  அரசு தனது கடமையை செய்கிறது.  சமுதாயம் தனது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  

கடந்தாண்டு முழு அடைப்பு காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது கிராமங்களுக்கு திரும்பிச் சென்றபோது அவர்களிடத்தில் எந்த எதிர்மறை சிந்தனையும் இல்லை.  திருட்டோ கொள்ளையோ அவர்கள் செய்யவில்லை.  அமைதியாகத் தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை அவர்கள் பொறுத்துக் கொண்டார்கள்.  அவர்கள் கடந்து சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் அவர்களுக்கு முன்வந்து உதவி செய்தார்கள்.  உணவளிப்பது, குழந்தைகளுக்கு பால் ஏற்பாடு செய்வது, காலணிகள்; போக்குவரத்து வசதிகள்; தண்ணீர் ஆகியவற்றை மனமுவந்து ஏற்பாடு செய்தது அற்புதமான காட்சியாகும்.  இந்த காலகட்டங்களில் பாரத நாட்டின் எந்த மூலையிலும் ராணுவத்தை வரவழைக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை.  எந்தக் கலவரமும் இல்லை.  நமது நாட்டின் பரஸ்பர உதவி செய்யும் மனப்பான்மைக்கு இது மிக நல்ல உதாரணம்.  நாடு முழுவதும் நேர்மறை சிந்தனை நிலவி வருகிறது.  காலம் குறித்து நமக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.  நாம் அனைத்தையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.  

15 மாதங்கள் நமக்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளது.  நாம் எந்த திசையில் செல்ல வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்.  நம்முடைய ஸ்வயம்ஸேவகர்களுக்கு  எந்தவிதமான முன் பயிற்சியும் இல்லை. சங்கத்தில் கடமை உணர்வு, கருணை மனம் ஆகியவையே கற்றுக்கொடுக்கப்படுகிறது. தேவை ஏற்படும்பொழுது ஸ்வயம்ஸேவகர்கள் எந்த வேலையையும் செய்வதற்கு தயாராக உள்ளனர். இது தேசபக்தியின் வெளிப்பாடு. சமுதாயத்தின் மீது நாம் கொண்டுள்ள அன்பின் அடையாளம்.  புதிய புதிய வேலைகள் வருகின்றன புதிது புதிதாக திட்டங்கள் தீட்ட வேண்டி உள்ளது உதாரணமாக ஆக்சிஜன் பிரச்சனை வந்த பொழுது நாம் அதனை மிகச் சிறப்பாக எதிர்கொண்டோம் ஸ்வயம்ஸேவகர்களின் தொண்டுள்ளம், கடமையின் மீது நமக்கு இருக்கும் பற்று ஆகியவை புதிய வழிகளைக் கண்டுபிடித்து வேலை செய்வதற்கு நமக்கு உத்வேகம் அளிக்கிறது.  இதன் பின்புலத்தில் சங்கத்தின் இத்தனை ஆண்டு கால தவம் மற்றும் வேலை முறை இருக்கிறது என்பது மிகவும் முக்கியமானது.  

வருங்காலத்தில் நாம் 3-4 விதமான வேலைகளைச் செய்யவேண்டியுள்ளது.

  1. Rehabilitation மறுசீரமைப்பு. வாழ்க்கையினை பழையபடி கொண்டு வரவேண்டியுள்ளது.  குடும்பங்கள் மற்றும் தேசத்தின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, தொழில் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.  அரசாங்கம் திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கின்றது.  மக்கள் ஒருவருக்கொருவர் திட்டமிட்ட ரீதியில் பரஸ்பர உதவிகளை செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.  பல குடும்பங்களில் வருமானம் ஈட்டுகின்றன முக்கியமான நபர் அகால மரணம் அடைந்ததால் அந்த வீட்டிலுள்ள விதவைப் பெண்கள், சிறு குழந்தைகள், வயதானவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மாணவர்களின் கல்வி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது அவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.  அனைவருக்கும் மன தைரியத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது.  அதற்காக counselling கொடுக்க வேண்டும்.  தன்னம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.  மாணவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்க, கதை மூலம் பண்புப் பதிவுகளை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.  Online மூலம் அனைத்தையும் கற்பித்து விடமுடியாது.  சிறிய குழுக்கள் ஏற்படுத்தி கல்வி கற்பதற்கும் பதிவுகளை ஏற்படுத்துவதற்கும் நாம் முயற்சி செய்ய வேண்டும்.  இதற்கு பெரிய அளவில் திட்டம் தேவை.  
  2. கொரானாவின் மூன்றாவது அலை பற்றிய பயம். மூன்றாவது அலை வரக்கூடாது என்றே நாம் அனைவரும் விரும்புகிறோம்.  ஆங்கிலத்தில்waiting for godotஎன்று ஒரு நாடகம் இருக்கின்றது.  அதன் கதாபாத்திரங்கள் அனைவரும் கோடோவுக்காகக் காத்திருக்கின்றனர்.  அது மனிதனா, மிருகமா, தண்ணீரா, புயலா, மனிதனாக இருந்தால் ஆணா, பெண்ணா என்று யாருக்கும் தெரியாது.  ஆனால் அதைப் பற்றிய முழுமையான கவலை மட்டும் இருந்தது.  அது வந்தால் என்ன செய்யும், என்ன சொல்லும் என்று அனைவரும் பயந்து கொண்டிருந்தனர்.  அதைப்போலவே மூன்றாவது அலை பற்றிய நமது பயமும் உள்ளது.  குழந்தைகளை பாதிக்கும் என்று பல அறிஞர்கள் கூறுகின்றனர்.  பெரும்பான்மையானவர்கள் தடுப்பூசி இதற்கு சரியான தீர்வாக அமையும் என்று கூறுகிறார்கள்.  கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் பிரச்சனை சிறிது சரியாவது போல் தோன்றியது ஆனால் நமது எச்சரிக்கையின்மையால் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. பிரச்சனைகளை எதிர்கொள்ள பயிற்சி தேவை.  லட்சக்கணக்கானவர்களுக்கு பயிற்சி அளித்து திறமையானவர்களைக் கொண்டு நாம் இந்தப் பிரச்சனையை எதிர்கொண்டு வெற்றி காண வேண்டியுள்ளது. 
  3. நமது தினசரி வேலை பாதிக்கப்பட்டுள்ளது. ஶாகா, பைடக், ஸம்பர்க, ப்ரவாஸ் ஆகியவை சரிவர நடக்கவில்லை.  இரண்டு வருடங்களாக ஸங்க ஶிக்ஷா வர்க நடக்கவில்லை.  ஸகஜமான ஸம்பர்க, ஒருவருக்கொருவர் சந்திப்பது, அளவளாவுவது ஆகியவை நடப்பதில்லை.  கடந்த ஆண்டு நமது ஸங்க விழாக்களை online மூலம் நடத்தியுள்ளோம்.  தினசரி வேலை நடக்கத்தான் வேண்டும்.  நிதானமாக மிகுந்த எச்சரிக்கையோடு நாம் இந்தப் பணிகளைச் செய்ய வேண்டும்.  இதற்கு சரியான திட்டமிடல் அவசியம்.  மனித நிர்மாணம் தடைப்படக் கூடாது.  சமுதாயத்தின் உள் சக்தி மற்றும் திறன் வளர்க்க வேண்டும்.  பல விதங்களில் நமது அடிப்படையான வேலைகளைச் செய்வதற்கு நாம் பழக வேண்டும்.  பாலகர்களுக்கு online ஶாகா நடத்துவது எளிதல்ல.  மற்ற வயதினருக்கு நாம் நடத்த முடியும்.  பௌத்திக் நிகழ்ச்சிகள் நடத்தலாம்.  ஜாகரண் ஶ்ரேணியைச் சேர்ந்த ஸம்பர்க,  ப்ரசார் ஆகிய துறைகளைச் சேர்ந்தோர் பல யுத்திகளைக் கையாண்டு அதிகமான நிகழ்சிகளை நடத்தியுள்ளனர்.  ஆயினும் ஸங்கஸ்தானத்தில் சந்தித்து ஆத்மார்த்தமான நட்பு வளர்த்தல், நமது சுய வளர்ச்சி, தேசிய; சமுதாய எண்ணம் மேம்படுதல் ஆகியவை இல்லாது போயிருக்கிறது.  சிறிது சிறிதாக அதனை நாம் சரிப்படுத்தியாகவேண்டும்.  
  4. ஒழுக்கம் மற்றும் பண்புப்பதிவுகள் மிக அவசியம். நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் பேசும்போது, “நாம் கலாச்சாரத்தின் புனர்நிர்மாணம் செய்கிறோம்;  எந்தவொரு தொழிற்சாலையையும் நிறுவவில்லை;  கலாசாரத்தின் திறனானது ஒழுக்கத்தின் அடைப்படையில் அமைகிறது; பொருளாதாரம் மற்றும் அரசியலின் அடிப்படையில் அல்ல;  ஒழுக்கத்தின் அடிப்படையிலேயே நமது வளர்ச்சியானது ஏற்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.  இதனையே நமது புனித நூல்கள், ஸாதுக்கள், மத சம்பிரதாயங்கள் அனைத்தும் கூறுகின்றன.  நாம் இந்த விஷயத்தினை மண்டல் கிராமங்கள் வரை எடுத்துச் செல்ல வேண்டும்.  ஒரு மூன்றாண்டுகள் நம்முடைய வேலை விஸ்தரிப்பு மற்றும் வளர்ச்சி குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.  அதற்கு வழி கண்டுபிடிக்க வேண்டும்.  மதன்மோஹன் மாளவியா அவர்கள், 

‘க்ராமே க்ராமே ஸபா கார்யா; க்ராமே க்ராமே கதாஶுபா;।  பாடஶாலா மல்லஶாலா ப்ரதி பர்வ மஹோத்ஸவ:॥’என்று கூறியுள்ளார்.  அவரது பார்வையில் ஸங்க வேலை இவை அனைத்தையும் ஒருசேர வழங்கும்.  பாடசாலை என்பதும் உடற்பயிற்சி சாலை என்பதும்ஸங்க ஶாகாவே. அத்தோடு பண்புக் கதைகள் மூலம் நல்ல பண்புப் பதிவுகளை ஏற்படுத்துவது; பரஸ்பர உதவி ஆகியவற்றையே வலியுறுத்துகிறார்.  இதற்காகவே தங்களது வாழ்க்கையையே கொடுத்தவர்கள் ஸமர்ப்பணம் செய்தவர்கள் பலர் உள்ளனர்.  நமது செயல்முறையை இன்னும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.  

தொடர்புகள் விட்டுப் போகவில்லை.  அவசரநிலை(emergency) காலத்தில் ஶாகா நடக்கவில்லை; தகவல் தொடர்பு; போலீஸிடமிருந்து தப்பிக்க வேண்டியிருந்தது.  ஆயினும் அவசரநிலை முடிந்தவுடனேயே மீண்டும் தொடங்கி ஸங்க வேலையை நாம் மிக நல்ல முறையில் வளர்ந்திருக்கிறோம்.  இன்று கொரோனாவிடமிருந்து மட்டுமே தப்பிக்க வேண்டியுள்ளது.  நம்முடைய சிறந்த தொடர்பு மூலமாக நித்ய ஸித்த ஶக்தி உயிர்புடன் இருப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.  அதற்கு நமது ஸங்க வழிமுறை கைகொடுக்கும்.  இதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.  அவ்வப்போது தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு சமுதாயத்திற்கு வழிகாட்ட வேண்டும்.  சில சில குறைபாடுகள் ஏற்படலாம்.  அடுப்புக்கரி விற்பனை செய்யும் பொழுது நமது கையிலும் கரி வரத்தான் செய்யும்.  கொரோனா போன்றே மற்ற வைரஸ்களாலும் நாம் பாதிக்கப்படக்கூடாது. சுயநலம், ஊழல், புகழாசை, பதவி மோஹம் ஆகியவையே அந்த வைரஸ்கள்.  நமக்குள் இவை ஊடுருவாமல் காக்க வேண்டும்.  சமுதாயத்தில் ஜாதி ஏற்றத்தாழ்வுகள்,  தீண்டாமை போன்ற வைரஸ்கள் பரவாமல் காக்கவேண்டும்.  தினசரி ஶாகா என்ற நமது வேலை முறையை; பாரம்பரியமான பழக்கத்தை உறுதிப்படுத்தி அதிலேயே மூழ்கி ஆனந்தம் அனுபவித்து அந்த வழியிலேயே நாம் செல்ல வேண்டும்.  இது நமது இயல்பு.  இதை இன்னும் சிறப்பாக செய்வதற்கு திட்டமிடுதல் வேண்டும்.  பலரோடு கலந்து ஆலோசனை செய்து நமது ஸ்வயம்ஸேவகர்களின் ஆளுமை வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும்.  இக்காலகட்டத்தில் இயல்பாகவே ஸங்கத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  பிரச்சினைகளை நல்ல முறையில் எதிர்கொள்ள நாம் திறமை வாய்ந்தவர்களாக வேண்டும்.  நித்ய ஸித்த ஶக்தியை நல்ல முறையில் வளர்த்து சமுதாயம் மற்றும் தேசத்தினை முன்னேற்றப் பாதையில் பீடு நடை போட வைக்க வேண்டும்.  இதற்கு நமது ஸ்வயம்ஸேவகர்களின் திறமை மற்றும் ஆன்ம பலம் அதிகரிக்க வேண்டும்.  இவ்வழியில் நாம் தொடர்ந்து செல்வோம்.  இறைவனின் அருள் நமக்குக் கிட்டும்.

தமிழாக்கம்- கணபதி சுப்பிரமணியம்

2 COMMENTS

  1. Wow that was strange. I just wrote an really long comment but after I clicked submit my comment didn’t show up.
    Grrrr… well I’m not writing all that over again. Anyhow, just wanted to
    say excellent blog!

  2. Great blog! Do you have any helpful hints for aspiring writers?
    I’m planning to start my own blog soon but I’m a little lost on everything.

    Would you recommend starting with a free platform like WordPress or go for a paid option? There are so many options out there that I’m totally overwhelmed ..

    Any ideas? Thanks!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here