அணுவல்லமை கொண்ட Agni Prime கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் ஏவி பரீட்சித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தின் புபனேஷ்வருக்குக் கிழக்கே 150 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அப்துல் கலாம் தீவிலுள்ள தளத்திலிருந்து இன்று (28) காலை 10.55 மணிக்கு குறித்த ஏவுகணையின் பரீட்சார்த்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்திய பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி அமைப்பு அறிக்கை ஒன்றினூடாகத் தெரிவித்தது.