‘நாசா’ நடத்திய போட்டி : இந்திய மாணவர் குழு வெற்றி

0
141

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, ‘நாசா’ சர்வதேச அளவில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான அறிவியல் போட்டியை ஆண்டுதோறும் நடத்துகிறது. அறிவியல் மற்றும் விண்வெளி துறை சார்ந்த புதிய வடிவமைப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட திறமைகளை கண்டறிய இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.இதில், 33 பள்ளிகள், 58 கல்லுாரிகளைச் சேர்ந்த 91 குழுக்கள் பங்கேற்றன.அமெரிக்கா மற்றும் சர்வதேச மாணவர் குழுக்கள், சூரிய மண்டலத்தில் காணப்படும் நிலப்பரப்பை உருவகப்படுத்தி, அதை ஆய்வு செய்யும், ‘ரோவர்’ எனப்படும் கருவியை வடிவமைத்து, அதை வெற்றிகரமாக சோதனை செய்ய வேண்டும்.’ஆன்லைன்’ வாயிலாக நடந்த இந்த போட்டியின் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இதில், பள்ளி மாணவர்களுக்கான பிரிவில், பஞ்சாபை சேர்ந்த, ‘டீசன்ட் சில்ட்ரன் மாடல் பிரெசிடென்சி’ பள்ளி மாணவர் குழு விருதை வென்றது. கல்லுாரி மாணவர்களுக்கான பிரிவில், தமிழகத்தின் வேலுாரைச் சேர்ந்த வி.ஐ.டி., பொறியியல் கல்லுாரி மாணவர் குழு விருதை வென்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here