நாடு முழுக்க கட்டாய மத மாற்ற தடை சட்டம் கொண்டு வர விசுவ ஹிந்து பரிஷத் வேண்டுகோள்

0
431

விசுவ ஹிந்து பரிஷத் கட்டாய மத மாற்ற தடை சட்டம் கொண்டு தொடர்ந்து வலியிறுத்தி வருகிறது. தற்போது உத்தரப் பிரதேசத்தில் உத்தரப் பிரதேசத்தில் வசிக்கும் வாய் பேச முடியாத, காது கேட்க இயலாத மாற்றுத் திறனாளியான பெண் மற்றும் சிறுமியை கட்டாயப்படுத்தி இஸ்லாம் மதத்துக்கு மாற்ற முயற்சித்த செயல் நடந்துள்ளது. அதற்க்கு கண்டனம் தெரிவித்து கட்டாய மத மாற்ற தடை சட்டம் கொண்டு வர வலியிறுத்தி விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் இணை பொது செயலர் சுரேந்திர ஜெயின் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் வசிக்கும் வாய் பேச முடியாத, காது கேட்க இயலாத மாற்றுத் திறனாளியான பெண் மற்றும் சிறுமியை கட்டாயப்படுத்தி இஸ்லாம் மதத்துக்கு மாற்ற முயற்சித்த செயல் நடந்துள்ளது. பாரதத்தில் மத மாற்றும் கும்பலின் செயல் எவ்வளவு தீவிரமடைந்துள்ளது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. அப்பாவி மக்களை மூளை சலவை செய்து மதம் மாற்றி வந்த கும்பல், இப்போது மாற்றுத் திறனாளிகளையும் விட்டு வைக்கவில்லை என்பது அம்பலமாகியிருக்கிறது.

நொய்டாவில் வசிப்பவர்கள் உமர் கௌதம், ஜஹாங்கீர் ஆகியோர். பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேற்கண்ட இருவரையும் உ,பி. காவல் துறையினர் கைது செய்தனர்.விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்,ஐ. உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோரை இவர்கள் கட்டாய மத மாற்றம் செய்துள்ளனர். இதற்காகவே நொய்டா ஜாமியா நகரில் இஸ்லாமிய தாவா சென்டர் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இங்குதான் மூளைச் சலவை செய்து மதம் மாற்றும் பணி நடக்கிறது. பணம், வேலை வாய்ப்பு, திருமணம் என ஆசை காட்டி ஒரு பெரும் கும்பல் இந்த வேலையை செய்து வருகிறது. உ.பி.யில் கட்டாய மத மாற்ற தடை சட்டம் அமலில் உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆகவே இந்த சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும். மதம் மாற்றும் தீய சக்திகளுக்கு வெளிநாட்டில் இருந்து ஏராளமான பணம் வருகிறது. இதை முஸ்லிம் சமுதாயம் நியாயப்படுத்துவதுதான் கொடுமையான விஷயம். இந்த ஜிகாதிகளுக்கு சட்டப் பாதுகாப்பு கொடுக்க பெரிய அளவில் பணம் கொடுத்து வாதாட வக்கீல்களும் முன்வருகின்றனர். இது இன்று நேற்று தொடங்கியது அல்ல. பாரதத்தில் இஸ்லாம் காலடி வைத்த நாளிலிருந்தே இந்த கொடுமை அரங்கேறி வருகிறது. காலத்துக்கு ஏற்ப தங்கள் மதம் மாற்றும் உத்தியை இவர்கள் மாற்றி வருகின்றனர். சாமதான பேத தண்டம் என்ற அனைத்து வழிகளையும் கையாண்டு காலம் காலமாக இது நடந்து வருகிறது.

 

அண்மைக்காலமாக லவ் ஜிஹாத் என்ற கீழ்த்தரமான உத்தியைக் கையில் எடுத்துள்ளனர். கொரோனா என்ற கொடிய நோய் உலகையே உலுக்கி வரும் நிலையில் எத்தனையோ நல்ல உள்ளங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயன்ற சேவைப் பணிகளை செய்து வருகின்றனர். ஆனால் மதம் மாற்றும் மிஷநரிகளும் ஜிகாதிகளும் கொரோனாவைக் காட்டி அந்நிய நாட்டிலிருந்து உதவி என்ற பெயரில் ஏராளமான நிதியைப் பெற்று இதையும் மதம் மாற்றும் செயலுக்கு பயன்படுத்தும் இழி செயலை செய்து வருகின்றனர். இதற்கு டூல் கிட் கும்பல்களும் உடந்தையாக இருக்கின்றனர்.

இப்படிப்பட்ட மத மாற்றும் கும்பலின் செய்கையை விசுவ ஹிந்து பரிஷத் கடுமையாக எதிர்ப்பதுடன், இது குறித்து நியோகி கமிஷன் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது. அத்துடன் நியோகி கமிஷன், வேணுகோபால் கமிஷன் பரிந்துரைத்த கட்டாய மத மாற்ற தடை சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும். பல சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளும் இதுவே. மதத்தின் பெயரால் பாரதம் பிளவுபடாமலிருக்கவும் மதம் மாற்றும் ஜிகாதிகளின் பயங்கரவாதமும் தடுக்கப்பட வேண்டும். தேச விரோத கும்பலை ஒடுக்க பாரத தேசம் நடவடிக்கை எடுக்க வேண்டிய சரியான தருணம் இது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here