நீட் என்பதன் அவசியத்தையும், செயல்முறையையும் தீர ஆராய்ந்து, தமிழகம் கேட்ட மூன்று ஆண்டுகள் விதிவிலக்கும் கொடுத்து, பின்னர் நீட் செயல்படுத்தப்பட்டே வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது..! இனி என்ன செய்ய முடியும் தமிழக அரசால்..? United Nations கோர்ட்டுக்குப் போவார்களா..?
தன்னை ஒரு கமிஷனுக்கு தலைவராக்கும் போது, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவைப் பற்றிக் கவலையே படாமலா ஒரு நீதிபதி அதை ஒப்புக் கொள்வார்..? தான் செய்யப்போவதற்கு சட்ட மரியாதையே கிடையாது என்பது தெரிந்தேவா ஒரு நீதிபதி இறங்குவார்..?
ஒரு செயலுக்கு அர்த்தமே இல்லை; பிரயோசனமே கிடையாது என்றே தெரிந்தேவா ஒரு மாநில அரசு கமிஷன் அமைத்து காசு செலவழிக்கும்..?
கமிஷன் முன் 86000 பேர் வந்து நீட் தேவையில்லை என்று சொல்லியிருப்பதால், நீட்கமிஷன் அமைத்தது சரிதான் என்று சொல்லியிருக்கிறார் மா.சு.
அப்படியானால், நான் கேட்கிறேன்:
1. டாஸ்மாக் அவசியம்தானா என்று ஒரு கமிஷன் வைக்கலாமா..? எல்லா தாய்மார்களும் வந்து வேண்டாம் என்று கதறுவார்கள்..! டாஸ்மாக்கை மூடி விட முடியுமா..?
2. நான் வேலை செய்து வரி கட்டுகிறேன். அதை வேலையே செய்யாமல் காலாட்டிக் கொண்டு சோம்பேறித்தனமாய்க் கிடப்பவர்களுக்கு இலவசமாய் கொடுப்பது சரிதானா என்ற கேள்விக்கு ஒரு கமிஷன் அமைக்கலாமா..? மத்தியவர்க்கமே மொத்தமாய் வந்து குமுறும்..! இலவசத்தை நிறுத்தி விடலாமா..?
3. உலகின் அழகான பீச்சை, தலைவர்களுக்கு சமாதிகள் என ஒரு சுடுகாடாக்குவது சரிதானா என்று ஒரு கமிஷன் வைத்து கருத்து கேட்கலாமா..? பலர் வந்து குமுறுவார்கள்..! சமாதிகளை இடித்து விடலாமா..?
4. கோடிக்கணக்கானோர் நம்பும் இந்து மதத்தை அவமதிப்பவர்களை ஒன்றும் செய்யாதிருக்கும் இந்த டெமாக்ரஸி சரியானதுதானா என்று ஒரு கமிஷன் வைத்து கருத்து கேட்கலாமா..? நிச்சயம் பல கோடி பேர் வந்து பேசுவார்கள்..! உடனே இந்து மதத்தை அவமதிப்பவர்களை சிறையில் அடைக்க முடியுமா..?
கமிஷன் வைத்து அதில் வந்து பேசுபவர்களின் கருத்தை வைத்தே எல்லாம் நடத்த முடியும் என்றால், சட்டம் தேவையில்லை, கோர்ட் தேவையில்லை, பார்லிமெண்ட் தேவையில்லை, ஒரு புண்ணாக்கும் தேவையில்லை..!
இந்த நீட் கமிஷன் அமைத்தது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க வாய்ப்பு அதிகம்..! கமிஷன் நிறுத்தப்படும்..!
தேர்தலில் ஜெயிக்க, நடக்காது என்று தெரிந்தேதான், நீட்டை ரத்து செய்வேன் என்று ஸ்டாலின் உதார் விட்டார்..!
இந்த அரசியல் ஏமாற்று வேலைகளை நம்பாமல் நீங்கள் நன்றாகப் படியுங்கள் தமிழக மாணவச் செல்வங்களே..! உங்களால் சாதிக்க முடியும்..!