கோயம்புத்தூரில் பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிலங்களை சில நபர்கள் ஆக்கிரமித்ததை மீட்டது இந்து அறநிலையத்துறை.

0
231

கோயம்புத்தூரில் பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிலங்களை சில நபர்கள் ஆக்கிரமித்ததை மீட்டது இந்து அறநிலையத்துறை.


கோயம்புத்தூர் சுக்ரவார்பேட்டை சாலையில் பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 909 சதுர அடி பரப்பளவை ஆக்கிரமித்து உணவகம் ஒன்று கட்டப்பட்டு செயல்பட்டு வந்துள்ளது. கோயில் நிலங்களை அரசு மீட்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இக்கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு உறுதியானது.

அதனால், இடத்தை உடனடியாக காலி செய்ய இந்து அறநிலையத் துறையினர் உணவகத்தை அறிவுறுத்தி 30 நாள் கால அவகாசம் கொடுத்தனர். எனினும் அவர்கள் அந்த இடத்தை காலி செய்யாததால், உணவகக் கட்டிடத்தை ஹிந்து சமய அறநிலையத்துறையினர் காவல்துறை உதவியோடு அகற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here