ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் -ஆர்.எஸ்.எஸ்., வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது…
(11 ஜூலை, 2021, சித்ரகூட் (சத்னா மாவட்டம்), மத்தியப் பிரதேசம்)
கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் நாடு தழுவிய கார்யகர்த்தர்களுக்கான பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சுமார் 2.5 லட்சம் இடங்களுக்கு அனுப்பப் படுவார்கள். ஆர்.எஸ்.எஸ்.,ஸின் 27,166 கிளைகள் இப்போது மீண்டும் களத்தில் தொடங்கப்பட்டுள்ளன.
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் அகில பாரதீய பிராந்த பிரசாரக் கூட்டத்தில், அமைப்பின் நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடலுடன், கொரோனாவில் இரண்டாவது அலைகளிலிருந்து எழுந்த சூழ்நிலைகள் குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டன. அப்போது, பிராந்த அளவில் மேற்கொள்ளப்பட்ட சேவைப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. ஸ்வயம்சேவகர்களால் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம்கள், நோய்த்தடுப்புக்கான சிகிச்சை மையங்கள் மற்றும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் மேற்கொள்ளப் பட்ட விழிப்பு உணர்வு பிரசாரங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன.
கொரோனா வைரஸின் மூன்றாவது அலைக்கான சாத்தியக் கூறுகளைக் கருத்தில் கொண்டு, அரசு நிர்வாகத்துடன் ஒத்துழைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் நாடு முழுவதும் கார்யகர்த்தர்களுக்கான சிறப்புப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்படும். நெருக்கடியான இத்தகைய சூழ்நிலையில், இந்தப் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள், சமூகத்தில் மக்களிடம் மன உறுதியை அதிகரிக்கத் தேவையான அனைத்தையும் சரியான நேரத்தில் அடைவார்கள். சுமார் 2.5 லட்சம் இடங்களைச் சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடையும்! செப்டம்பர் முதல் ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் மக்களை விழிப்பு உணர்வு அடையச் செய்வதன் (ஜன் ஜாக்ரண்) மூலம் ஸ்வயம்சேவர்கள் பலரும் அமைப்புகளும் இந்தப் பிரசாரத்தில் இணைக்கப்படுவர்.
இந்தப் பயிற்சியில், குழந்தைகள், தாய்மார்களுக்கு கொரோனாவைத் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவலுக்குப் பிறகு, தற்போது நிலைமை இயல்பு நிலைக்கு திரும்புகிறது. இந்த நிலையில் சங்க ஷாகாக்களின் செயல்பாடுகளும் மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பெறப்பட்ட தகவல்களின்படி, தற்போது நாடு முழுவதும் மொத்தம் 39,454 ஷாகாக்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 27,166 ஷாகாக்கள் இப்போது நேரடியாகக் களத்தில் உள்ளன. 12,288 ஷாகாக்கள் இ-ஷாகாக்கள். மேலும் வாராந்திர கூடுதல் (மிலன்) 10,130 ஆக உள்ளது! அவற்றில் 6510 நேரடியாக மீண்டும் களத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இவற்றில் இ-மிலன் 3620 ஆக உள்ளது. கொரோனா கால ஊரடங்கு காலத்தில் சிறப்பாக தொடங்கப்பட்ட ‘குடும்ப் மிலன்’ நாடு முழுவதும் 9637 என தகவல் பெறப்பட்டுள்ளன.
இவ்வாறு, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் அகில பாரதீய பிரசார் பிரமுக் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார்.
जय श्री राम
[…] கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலைய… […]