சைவதூஷன பரிகாரம் – புத்தக விமர்சனம்.

0
674

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் புண்ணிய பூமியாம் பரத கண்டத்தின் தென்னகத்தே உள்ள ஈழத்து மண்ணில் யாழ்ப்பாணம் நல்லூரில் பொது சகாப்தம் 1822ம் ஆண்டு முதல் 1879ம் ஆண்டு வரை வாழ்ந்தவர்.

இளமையிலேயே சைவ சித்தாந்த நூல்கள் அனைத்தையும் கற்றுணர்ந்தவர். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளில் பெரும் புலமை பெற்றவர். ஆலயங்களில் வாரந்தோறும் பிரச்சாரம் செய்யும் முறையை ஏற்படுத்தியவர். “வித்தியாநுபாலன யந்திர சாலை” எனும் அச்சகத்தை நிறுவி மிகத் தேர்ந்த அச்சுப்பணி மூலம் தாம் எழுதிய மற்றும் மறுபதிப்பாக எழுபத்தி நான்கு நூல்களையும் அச்சிட்டவர். கிறிஸ்தவரின் மதமாற்றத்தைத் தடுக்க “சைவ வித்யா பிரகாச சாலை” என்னும் தமிழ் பாடசாலையை ஆரம்பித்ததுடன், சுதேச தர்மத்தைக் காக்கும் அரணாய் பல கல்வி சாலைகள் அமைய வழிகோலியவர். தனது பிரசுரங்களின் மூலம் சமய எழுச்சிக்கு வித்திட்டவர். மதமாற்றத்தைத் தடுக்க அரும்பணி செய்தவர். மதம் மாறியவர்களை மீண்டும் தாய்மதம் திருப்பியவர். ஈழத்தில் பன்னிரு திருமுறைகளின் பக்தி ஒலி இன்றும் ஒலிக்கக் காரணமானவர். சுவடே இல்லாமல் கிறிஸ்தவர்கள் அழித்த திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் போன்ற பாடல்பெற்ற சிவாலயங்களை மீண்டும் எழுப்பியவர். இப்படி இம்மகானின் பல்துறை பேராற்றல் நிறைந்த பணிகளை நினைத்துப் பார்க்கும்பொழுது இவர் ஓர் அவதாரம் என்றும் ஐந்தாம் குரவர் என்றும் ஈழத்து இந்து சமயிகள் போற்றியது பொறுத்தமானதே.

“சைவதூஷண பரிகாரம்” என்னும் இந்நூல் தமிழ், சமஸ்கிருதம், சமய விசாரங்கள், சமயநெறிகள் ஆகியவற்றில் நாவலரின் ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்துகின்றது. கிறிஸ்தவ சமயத்தின் துர்பிரச் சாரங்களை மறுதலித்து, செழுமை வாய்ந்த தனது தர்க்கத்தினாலே வசவநெறியின் மாண்பினை நிலைநாட்டிட நாவலர் அருளிய அரும்பெரும் பொக்கிஷம் இந்நூல்.

1854ம் ஆண்டு நாவலரால் இயற்றப்பட்ட இந்நூலின் பிரதிகள் கமபோது இல்லை என்பது மாற்று மதத்தவரின் சதியோ என எண்ணத் தோன்றுகிறது.

நாவலரின் புகழை உலகமெங்கும் பரப்பி வருவதோடு இந் காலை வெளியிட ஊக்கமளித்த விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வ

தேச செயலாளர் சுவாமி விக்யானானந்தா அவர்களுக்கு எமது நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.

திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் பழந்தமிழ் பண்பாட்டில் உறைந்துள்ள சமய மேன்மையை நன்கு ஆழ்ந்து கற்றவர். நவீனம் கலந்த மரபுசார் நெறிகளைக் காக்கும் ஊடகவியலாளராக கிறிஸ்தவத் தின் போலி முகத்திரையை கிழித்தெறியும் தனது படைப்புகள் மூலம் நாவலரின் பணியைத் தொடரும் இவருடைய பொருத்தமான முன்னுரை இந்நூலுக்கு அணியாய்த் திகழ்கிறது. அன்னாருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

சிதம்பரத்திலே நடராஜ பெருமானது திருவருளோடு நாவலரின் வெளியீடுகளை பாதுகாத்து பிரச்சாரம் செய்துவரும் “நாவலர் அறக் கட்டளைக்கும்”, நல் ஆலோசனைகளை வழங்கிய அதன் தலைவர் திரு சா.அருள்மொழிச்செல்வன் அவர்களுக்கும் எமது நன்றிகள்.

இந்நூலை சிறந்த முறையில் சிரத்தையோடு கணினி தட்டச்சு’ செய்த திருமதி கௌரி ரமேஷ் அவர்களுக்கும், இந்நூலினைப் பிழை திருத்தம் செய்துதவிய திரு. எஸ்.பரமசிவம், திரு சௌ.சொக்கலிங்கம் ஆகியோருக்கும், நூலுக்கு மெருகூட்டும் வகையில் அட்டைப் படத்தை வடிவமைத்த திரு ரா.ராஜேஷ்வர பிரதீப் அவர்களுக்கும்! எம் நன்றிகள்.

இதனை சிறந்த முறையில் அச்சிட்டுத்தந்த மாதவமுத்ரா அச்சகத் திற்கும் நன்றிகள்.

இந்நூலிற்கு அனைத்து விதமான நல் ஆலோசனைகளை வழங்கிய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் திரு நா.சடகோபன் அவர்களுக்கு மன மார்ந்த நன்றிகள்.

2022 நாவலரின் இருநூறாவது ஆண்டுவிழாவினை நெருங்கும்! இத்தருணத்தில் சமய, சமூக ஆர்வலர்களின் விருப்பத்தையேற்றே இதனை வெளியிடுகின்றோம். ஈழத்து இந்துக்கள் மட்டுமல்லாது தமிழகம் மற்றும் உலகமெங்கும் வாழும் தமிழ்கூறும் நல்லுலகம் கிறிஸ்தவ மதமாற்றத்திற்கெதிரான நாவலரின் நற்பணியினை அவரின் ஆன்மீக வழித்தோன்றல்களாய் முன்னெடுத்துச் செல்ல இந்நூல் சிறந்ததோர் வழிகாட்டியாய் அமையும் என்பது திண்ணம். – “வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத் துறை விளங்க”

போற்றி ஓம் நமசிவாய! –

நாவலர் இந்து பண்பாட்டுப் பேரவை, சென்னை

நூல் கிடைக்கும் இடங்கள்;
சென்னை -63813 27516
திருச்சி – 0431 2761333
திருப்பூர் – 0421 2214222
சிதம்பரம் – 94863 88797
கோவை – 0422 2232422
திருவாரூர் – 93604 74555

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here