சபரிமலைக்கு தினசரி தரிசனத்துக்கு பக்தர்கள் அதிகரிப்பு.

0
212

சபரிமலையில் தினசரி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.


கேரள ஜூலை மாநிலம் சபரிமலையில் ஐயப்பன் கோவிலில் தற்போது ஆடி மாத பூஜை 10:05 நடக்கிறது. ஐந்து மாத இடைவெளிக்கு பின் தினமும் 5,000 பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். தடுப்பூசி போட்ட சான்றிதம். 48 மணி நேரத்துக்கு உட்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்., சான்றிதழ்களுடன் ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

முதலில் அறிவிக்கப்பட்ட முன்பதிவு முழுமையாக முடிவடைந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் சபரிமலை வர விருப்பம் தெரிவித்து தேவசம்போர்டுக்கு தகவல் அனுப்பினர். இதைத் தொடர்ந்து, நேற்று முதல் தினமும் 10,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கூடுதலாக அனுமதிக்கப்பட்ட பக்தர்களும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து உரிய சான்றிதழ்களுடன் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here