தடை செய்யப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக சில இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மதுரை, தேனி உள்ளிட்ட சில இடங்களில் தேசிய புலனாய்வு படையினர் சோதனை நடத்தினர்.
தேனி மாவட்டம் சின்னமனூரில் யூசுப் அஸ்லாம் என்ற இஸ்லாமிய அடிபடைவாதியின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் அவருக்கு தொடர்பு உள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து இன்று (ஜூலை 24) காலை 5: 00 மணி முதல் அவரது வீடு மற்றும் கடைகளில் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது போல் மதுரையில் ஒருவர் வீட்டில் என்ஐஏ., படையினர் சோதனை நடத்தினர். தெப்பக்குளம் தமிழன் தெருவில் வசித்தவர் இஸ்லாமிய அடிபடைவாதி அப்துல்லா இந்திய இறையாண்மைக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டதாக வழக்கு பதியப்பட்டது. இது தொடர்பாக இன்றும் சோதனை நடந்தது.